ஈரான் தலைவர் கமேனியை கொல்ல திட்டம்? உடைத்து பேசிய டாப் இஸ்ரேல் அதிகாரி! உற்று பார்க்கும் உலக நாடுகள்

Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் நாட்டின் உயர்மட்டத் தலைவரான அயதுல்லா அலி கமேனி கொல்லப்படவும் கூட வாய்ப்புகள் இருப்பதாக இஸ்ரேல் அதிகாரிகள் கூறியுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளதால் இது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

மத்திய கிழக்கில் இப்போது மீண்டும் பதற்றம் வெடித்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அமெரிக்கா உடனான அணுசக்தி பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் போட மறுத்து வருகிறது. இந்தச் சூழலில் தான் திடீரென ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்தது. இந்தத் தாக்குதலில் ஈரானின் மூத்த ராணுவ தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர்.

Israel Considers Killing Iran s Supreme Leader Khamenei Amid Escalating Strikes

இஸ்ரேல்

இதைத் தொடர்ந்து ஈரானும் இஸ்ரேலும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் சர்வதேச அளவில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே ஈரான் நாட்டின் உயர்மட்டத் தலைவரான அயதுல்லா அலி கமேனி கொல்லப்படுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கூட இஸ்ரேல் அதிகாரிகள் மறுக்கவில்லை.

கமேனியை கொல்ல திட்டம்?

இது தொடர்பாக அமெரிக்காவின் பிரபல வால் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு இஸ்ரேல் அதிகாரி பேட்டியளித்திருந்தார். அதில் ஈரானின் உயர்மட்ட தலைவர் கொல்லப்படுவது என்பது லிமிட்டில் இல்லாத விஷயம் எல்லாம் இல்லை என அவர் குறிப்பிட்டார். மேலும் அவர், "இந்த மோதல் முடிவுக்கு வர இரண்டே ஆப்ஷன்கள் தான் உள்ளன. ஒன்று ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தைத் தாமாகவே கைவிட வேண்டும். இல்லையெனில், அதை மீண்டும் உருவாக்க முடியாத நிலையை ஈரானைத் தள்ளுவோம்" என்றார்.

இஸ்ரேலின் சேனல் 12 ஊடகமும் இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. அயதுல்லா அலி கமேனி அகற்றப்படும் சாத்தியத்தை இஸ்ரேல் நிராகரிக்கவில்லை என்று சேனல் 12 செய்தி வெளியிட்டுள்ளது. அதேநேரம் இது எடுத்தோம் கவிழ்த்தோம் என எடுக்கும் முடிவாக இருக்காது என்றும் பல காரணிகளைப் பொறுத்து இருக்கும் என்றும் கூறியிருக்கிறது.

இஸ்ரேல் ஈரான் மோதல்

சனிக்கிழமையன்று ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடந்தன. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முயல்வதாகக் கூறி, இஸ்ரேல் தான் முதலில் பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நடத்தியது. அதற்கு ஈரானும் பதிலடி கொடுக்க ஆரம்பித்தது. இந்தச் சூழலில் தான் கமேனியை அகற்றவும் தயாராக இருப்பது போல இஸ்ரேல் அதிகாரி கூறியிருக்கிறார்.

இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று ஈரான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. தாக்குதல் தொடரும் நிலையில், இரு நாடுகளிலும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இஸ்ரேல் எச்சரிக்கை

அதேநேரம் இஸ்ரேல் இந்த தாக்குதலில் இருந்து பின்வாங்குவது போலத் தெரியவில்லை. இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் கூறுகையில், "ஈரான் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தினால் தெஹ்ரான் எரியும்.. ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி உத்தரவால் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடர்ந்தால் தெஹ்ரான் எரியும்" என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படி இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவது மத்திய கிழக்கு பிராந்தியம் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இந்தச் சூழலில் தான் ஈரானின் உயர்மட்ட தலைவர் கமேனி கூட கொல்லப்படலாம் என்பது போல இஸ்ரேல் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+