Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹமாஸ் வசம் சிக்கிய இளம்பெண்ணின் நிலை என்ன? வெளியான வீடியோ! சந்தேகம் கிளப்பிய இஸ்ரேல் ராணுவம்

Subscribe to Oneindia Tamil

காசா: இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி, அந்நாட்டின் பொதுமக்களை ஹமாஸ் படையினர் பிணை கைதியாக பிடித்து சென்றனர். இப்படி பிடித்து செல்லப்பட்ட இளம்பெண் ஒருவர் பேசும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இருப்பினும் இஸ்ரேல் பாதுகாப்புப்படை இது குறித்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

யூதர்கள் பாலஸ்தீனத்திற்குள் நுழைவதற்கு முன்னர் அந்நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் வாழ்ந்து வந்திருந்தனர். ஆனால் யூதர்களுக்கு அதரவாக மேற்கு நாடுகள், பாலஸ்தீனத்தை உடைத்து இஸ்ரேலை உருவாக்கிய நிலையில், பாலஸ்தீனியர்களின் இடம் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்க தொடங்கியது. தற்போது சுமார் 25 மைல் நீளமும், 6 மைல் அகலமும் கொண்ட காசா எனும் துண்டு நிலத்தில் சுமார் 23 லட்சம் பாலஸ்தீன மக்கள் சுருக்கப்பட்டிருக்கிறார்கள். இதையும் இஸ்ரேல் ஆக்கிரமிக்க முயற்சிகள் மேற்கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

 Israel Defense Forces Suspicious of Video of Israeli Teen Kidnapped by Hamas

இதன் காரணமாக இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் கிளர்ச்சி குழுக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுப்பதும், அதற்கு எதிராக இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்துவதும் பாலஸ்தீனத்தில் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்களாகும். ஆனால் கடந்த 2021ம் ஆண்டு அன்று 11 நாள் நடைபெற்ற போருக்கு பின்னர் பாலஸ்தீனத்தில் சற்றே அமைதி நிலவியது. இதனையடுத்து கடந்த 7ம் தேதி இந்த அமைதியை குலைக்கும் வண்ணம் ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல்தான் பலமான நாடு என்று சொல்லிக்கொண்டிருந்த நிலையில், இந்த ஏவுகணை தாக்குதல் அந்நாட்டின் ஆத்திரத்தை அதிகமாக தூண்டியது. இந்த தாக்குதலில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். அதேபோல பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் படையினர் பெண்களையும், குழந்தைகளையும், ராணுவ வீரர்களையும் பிணை கைதிகளாக பிடித்து சென்றனர். இந்த கைதிகளை வைத்துதான் தற்போது இஸ்ரேலுக்கு, அவர்கள் போக்கு காட்டி வருகின்றனர். ஹமாஸின் இந்த பயங்கரவாத தாக்குதலை அமெரிக்கா, பிரிட்டன் தொடங்கி பெரும்பாலான மேற்கு நாடுகள் கண்டித்திருக்கின்றன.

மறுபுறம் இஸ்ரேல், காசா மீது அதிரடி தாக்குதலை தொடுத்திருக்கிறது. கடந்த 10 நாட்களாக வான்வழி தாக்குதலை மேற்கொண்ட இஸ்ரேல் தற்போது தரை வழியாக ஊடுருவி வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட பதில் தாக்குதலில் தங்கள் நாட்டை சேர்ந்த சில பிணை கைதிகளை மீட்டிருக்கின்றனர். இருப்பினும் இன்னும் அதிகமான பிணை கைதிகளை இஸ்ரேல் மீட்க வேண்டியிருக்கிறது. மட்டுமல்லாது காசாவையும், ஹமாஸ் படையையும் முற்றிலுமாக அழிப்போம் என இஸ்ரேலிய ராணுவம் உறுதியேற்றுள்ளதால், இந்த தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஹமாஸ் அமைப்பால் கடத்தப்பட்ட இஸ்ரேலிய இளம்பெண்ணின் வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது. ஹமாஸின் இராணுவப் பிரிவான இஸ் அட்-தின் அல்-குவசாம் சார்பில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. இதில் 21 வயது மதிக்கத்தக்க இளம்பெண் தன்னுடைய பெயர் மியா ஸ்கெம் என்று கூறி சில தகவல்களை தெரிவித்துள்ளார். அதாவது, "நான் காசா எல்லைக்கு அருகில் உள்ள சிறிய இஸ்ரேலிய நகரமான ஸ்டெரோட் பகுதியை சேர்ந்தவள். அவர்கள் என்னை கவனித்துக்கொள்கிறார்கள், அவர்கள் எனக்கு சிகிச்சை அளிக்கிறார்கள், அவர்கள் எனக்கு மருந்து கொடுக்கிறார்கள். எல்லாம் சரியாக இருக்கிறது. எனது குடும்பத்தினரிடம், பெற்றோரிடம், உடன்பிறந்தவர்களிடம் சென்று சேர விருப்பப்படுகிறேன். எனவே தயவுசெய்து எங்களை இங்கிருந்து சீக்கிரம் வெளியேற்றுங்கள்" என்று கூறியுள்ளார்.

இவர் கடந்த 7ம் தேதி சூப்பர்நோவா சுக்கோட் இசை விழாவில் பங்கேற்றிருந்தார். அப்போதுதான் ஹமாஸ் படையினர் திடீரென இவர்களை தாக்கினர். இந்த தாக்குதலில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இதில்தான் மியா கடத்தி செல்லப்பட்டிருக்கிறார். இந்நிலையில் இந்த வீடியோ குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். "இந்த வீடியோ மூலம் ஹமாஸ் படையினர் தங்களை மனிதாபிமானமுள்ளவர்களாக காட்டிக்கொள்ள முயல்கிறார்கள். இவர்கள் ஏராளமான குழந்தைகளை கொன்றிருக்கின்றனர். ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு. நாங்கள் மியா உட்பட அனைத்து பிணை கைதிகளையும் திரும்பப் பெறுவதற்கான உளவுத்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+