இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் நிறைவு.. பதவியை தக்க வைப்பாரா நெதன்யாகு? exit polls சொல்வது என்ன?

Subscribe to Oneindia Tamil

ஜெருசலேம்: இஸ்ரேலில் பொதுத்தேர்தலுக்கான வாக்குபதிவு நிறைவு பெற்றுள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும். காசா போர், ஈரானுடனான மோதலுக்கு பிறகு நடைபெறும் முதல் பொதுத்தேர்தல் என்பதால், இஸ்ரேலில் அடுத்த பிரதமர் யார்? என்பதை சர்வதேச நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றே கணிக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேலில் நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. அக்டோபர் 27 ஆம் தேதி வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், இரவு 10 மணிக்கு நிறைவு பெற்றது. இந்த தேர்தலில், தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் ராணுவ தளபதி காடி ஐசென்கோட் ஆகிய இரு துருவங்களுக்கு இடையே பிரதமர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது.

Israel Elections 2026 Will Netanyahu retain his position What do the exit polls say

74 சதவீத வாக்குகள் பதிவு

உள்ளூர் நேரப்படி இரவு 8 மணி நிலவரப்படி, வரலாறு காணாத வகையில் 74 சதவீத வாக்குகள் பதிவாகின. இஸ்ரேல் வரலாற்றில் பதிவான அதிகபட்ச வாக்கு சதவிகிதம் இதுவே என்று கூறப்படுகிறது. இஸ்ரேலில் மொத்தம் 73 லட்சத்து 31 ஆயிரத்து 981 வாக்காளர்கள், 12,018 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

யார் வெற்றி பெறுவார்?

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மொத்தம் 120 இடங்கள் உள்ளன. இதில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெற ஒரு கட்சி அல்லது கூட்டணிக்கு 61 இடங்கள் கட்டாயமாகும். தேர்தல் முடிவுகள் அனைத்தும் முழுமையாகச் சரிபார்க்கப்பட்டு, வரும் நவம்பர் 4 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

எனினும், வாக்குப்பதிவு முடிந்த கையோடு எண்ணிக்கை தொடங்கியதால், இன்று (புதன்கிழமை) காலையிலேயே எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும், யார் அடுத்த பிரதமர் என்ற தேர்தல் முடிவுகளின் போக்கு தெரிந்துவிடும். காசா போர், ஈரான் போருக்கு பிறகு நடக்கும் முதல் பொதுத்தேர்தல் என்பதால் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெதன்யாகுவுக்கு பின்னடைவு - கருத்துக்கணிப்பு

பெஞ்சமின் நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி கூட்டணிக்கும், காடி ஐசன்கோட், நப்தாலி பென்னட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இஸ்ரேல் வரலாற்றில் இதுவரை எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைத்தது இல்லை. எனவே இந்த முறையும் அதே நிலை நீடிக்கும் என்றே தெரிகிறது. வாக்குப்பதிவு முடிந்ததும் வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும் பெஞ்சமின் நெதன்யாகு பின்னடவை சந்திப்பார் என்றே கூறுகின்றன.

இஸ்ரேலின் சேனல் 13 வெளியிட்ட கருத்துக்கணிப்புகளில், எதிர்க்கட்சிகள் கூட்டணி, வலதுசாரி கூட்டணியை விட சற்று முன்னிலை பெறும் என்று தெரிவித்துள்ளது. நெதன்யாகுவின் லிகுத் கட்சி தனிக்கட்சியாக அதிக இடங்களை வெல்ல வாய்ப்பு உள்ளாதாகவும் அதாவது 25 இடங்களை வெல்ல வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளது.

பெரும்பான்மை கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்?

எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து அரசை அமைக்க கட்சிகள் முயற்சிக்கும். ஆட்சி அமைப்பதற்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் பல நாட்கள் அல்லது வாரங்கள் நீடிக்கலாம். ஆட்சி அமைக்க யாருக்கும் முடியாமல் போனால், புதிய தேர்தல் நடைபெறும். அதுவரை தற்போது உள்ள கேபினட்டே காபந்து அரசாக செயல்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+