"சீக்ரெட் ஆவணம்.." ஹமாஸ் பிளான் என்ன! இஸ்ரேல் கைகளில் சிக்கிய அந்த டாக்குமெண்ட்.. மொத்தம் 2 பிளானாம்
டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டில் தாக்குதல் தொடரும் நிலையில், கொல்லப்பட்ட ஹமாஸ் பயரங்கவாதிகளிடம் இருந்து இஸ்ரேல் சில டாப் சீக்ரெட் ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளது.
கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஹமாஸ் மிக மோசமான தாக்குதல்களை நடத்தினர். ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது மட்டுமின்றி காசா எல்லையில் உள்ள இஸ்ரேல் பகுதிக்குள் நுழைந்தும் தாறுமாறாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பல இஸ்ரேல் நாட்டவர் கொல்லப்பட்டனர்.

இதற்கு இஸ்ரேலும் இப்போது பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதனால் அங்கே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் படைகளுக்கு இடையேயான யுத்தம் ஒரு வாரமாகத் தொடர்கிறது.
சீக்ரெட் ஆவணங்கள்: இதற்கிடையே இஸ்ரேல் நாட்டில் உள்ள கஃபர் சாத் நகரில் உள்ள ஆரம்ப பள்ளிகள் மற்றும் யூத் சென்டர்களை குறிவைத்து ஹமாஸ் படை போட்டிருந்த தாக்குதல் பிளான் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்தப் பகுதியில் கண்ணில் பட்ட அனைவரையும் சுட்டுக் கொல்ல வேண்டும். அங்குள்ளவர்களைப் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் செல்ல வேண்டும் என அவர்கள் போட்டிருந்த பிளான் குறித்த சீக்ரெட் டாக்குமென்டுகள் இப்போது வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் என்பிசி இது தொடர்பான டாக்குமெண்டை வெளியிட்டுள்ளது. அதில் "டாப் சீக்ரெட்" என்று அரபியா மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டிற்குள் நுழையும் முதல் இரண்டு ஹமாஸ் படைப் பிரிவுகள் உள்ளே ஊடுருவிய பிறகு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளது. கஃபார் சாத் பகுதியில் இருந்து அதிகப்படியான பிணையக் கைதிகளைப் பிடித்துக் கொண்டு காசா பகுதிக்குள் திரும்பிவிட வேண்டும் என்பதே அவர்கள் திட்டமாக இருந்துள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படை: ஹமாஸ் படை பயங்கர தாக்குதல் நடத்திய கஃபார் சாத்தில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்த தகவல்களை இஸ்ரேல் அரசு இதுவரை உறுதி செய்யவில்லை. இருப்பினும், ஒட்டுமொத்தமாக சுமார் 120க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை ஹமாஸ் படை பிணையக் கைதிகளாகச் சிறை பிடித்துச் சென்றுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் படை நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்தது. இதில் பல ஹமாஸ் வீரர்கள் கொல்லப்பட்டனர். அப்படிக் கொல்லப்பட்ட வீரர்களின் ஒருவரின் உடலில் இருந்து தான் இந்த சீக்ரெட் பிளான் குறித்த டாக்குமென்டை கைப்பற்றி உள்ளனர். இதில் அப்பகுதியின் விரிவான வரைபடங்களும் இருந்தது. மேலும், ஹமாஸ் மக்களைக் கொல்ல வேண்டும் அல்லது பிணையக் கைதிகளாகப் பிடிக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம் என்பது அதில் தெளிவாகத் தெரிகிறது.
பிணையக் கைதிகள்: "டாப் சீக்ரெட்" என்ற தலைப்பில் இருந்த டாக்குமெண்டில் முதலாம் குழு பள்ளியை நோக்கி முன்னேற வேண்டும் என்றும் இரண்டாம் குழு பிணையக் காதிகளைப் பிடிக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. அங்குள்ள பள்ளி மற்றும் யூத் சென்டரே அவர்கள் இலக்காக இருந்துள்ளது.
அதேபோல மற்றொரு டாக்குமெண்டில் ஹமாஸ் படை தங்கள் கண்ணில்படும் அனைவரையும் கொல்ல வேண்டும் என்றும் முடிந்த வரை பலரைப் பிணையக் கைதிகளாகப் பிடிக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. எங்கெல்லாம் மக்கள் அதிகம் இருப்பார்கள் என்பதைப் பட்டியலிட்டு அந்த இடங்களைச் சுற்றி வளைக்கவும் பிணையக் கைதிகளைப் பிடிக்கவும் அதில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தீவிர ஆய்வு: இந்த டாக்குமெண்டுகளை இப்போது இஸ்ரேல் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். எல்லை கிராமங்களில் எங்கு தாக்குதல் நடத்தாலும் என்பது குறித்த தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளது. ஹமாஸ் படையினருக்கு இத்தனை தகவல்கள் எப்படிக் கிடைத்தது.. இவ்வளவு பெரிய தாக்குதலை அவர்கள் எப்படி நடத்தினார்கள் என்ற கோணத்தில் இஸ்ரேல் அதிகாரிகள் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications