இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம்.. 2வது நாளாக தொடரும் பேச்சுவார்த்தை! விரைவில் தீர்வு எட்டுமா?

Subscribe to Oneindia Tamil

கெய்ரோ: காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர், சர்வதேச அளவில் கடும் கண்டனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இதனையடுத்து போர் நிறுத்த பேச்சுவார்த்தை எகிப்தில் நேற்று தொடங்கியது. இன்று இரண்டாவது நாளாக பேச்சுவார்த்தை நீடிக்கிறது.

பேச்சுவார்த்தைகள் இன்று சாதகமான சூழலில் தொடரும் என்று எகிப்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய பிரதிநிதிகளுக்கு இடையிலான மறைமுகப் பேச்சுவார்த்தைகள் ஷர்ம் எல்-ஷேக்கில் நேற்று தொடங்கியது. அமெரிக்கா முன்மொழிந்த போர்நிறுத்தத் திட்டத்தின் நிபந்தனைகளை இரு தரப்பும் விவாதிக்கத் தொடங்கின.

Israel Gaza ceasefire

ஹமாஸ் கைது செய்து வைத்திருக்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பது, பதிலுக்கு இஸ்ரேல் கைது செய்து வைத்திருக்கும் பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்வது, என இரு தரப்பும் கைதிகள் பரிமாற்றம் செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்த வருவதாக எகிப்து உளவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையை எகிப்து மட்டுமல்லாது கத்தார் தலைவர்களும் வழிநடத்தி வருகின்றனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்வைத்த போர்நிறுத்தம் மற்றும் பரந்த அமைதி செயல்முறையைத் தொடங்குவதற்கான திட்டத்தின் அடிப்படையில் இந்த பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.

ஹமாஸ் ஆயுதங்களை கைவிடுவது, காசாவிலிருந்து இஸ்ரேலிய படைகளை கொஞ்சம் கொஞ்சமாக வாபஸ் பெறுவது, பணயக்கைதிகள் விடுதலைக்கு பதிலாக, காசாவில் அரசியல் மாற்றம் ஏற்படுத்துவது ஆகியவை டிரம்ப்பின் முன்வைத்துள்ள திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஹமாஸின் பேச்சுவார்த்தைக் குழுவை மூத்த தூதர் கலீல் அல்-ஹய்யா வழிநடத்துகிறார். இவர் சமீபத்தில் தோஹாவில் நடந்த இஸ்ரேலிய தாக்குதலில் இருந்து தப்பினார். பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன் அவர் எகிப்திய உளவுத்துறை அதிகாரிகளை இவர் சந்தித்தார்.

போர் ஏன்?

பாலஸ்தீனம் என்பது இஸ்லாமியர்களின் நிலப்பரப்பாக இருந்தது. ஆனால் இங்கு குறிப்பிட்ட அளவுக்கு நிலத்தை வாங்கி குடியேறிய இஸ்ரேலியர்கள், கொஞ்சம் கொஞ்சமாக பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்க தொடங்கினர். குறிப்பாக காசாவை ஒரு திறந்தவெளி சிறையாக மாற்றினர். இதற்கு எதிராக குரல் எழுப்பியவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில்தான் கடந்த 2023ம் ஆண்டு இஸ்ரேல் மீது, பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்ததை போல, இந்த தாக்குதல் அமைந்துவிட்டது.

அன்று தொடங்கி இன்று வரை இஸ்ரேல் ராணுவம், பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் 60,000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். போர் நிறுத்தம் தொடர்பாக சர்வதேச நாடுகள் எவ்வளவு வலியுறுத்தியும் இஸ்ரேல் ராணுவம் அதை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+