ஈரானுக்கு மிகப்பெரிய பதிலடி கொடுக்க தயார்.. இஸ்ரேல் எடுத்த "திக்" முடிவு.. உலகப்போரை நோக்கி போகுது?
டெஹ்ரான்: இஸ்ரேல் மீது ஈரான் திடீரென ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.
கடந்த ஏப்ரல் 1ம் தேதி சிரியாவில் இருக்கும் ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலியப் படைகள் கடந்த சில மாதம் முன் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் சிரியா வடக்கு நகரமான அலெப்போவில் உள்ள விமான நிலையங்கள் மீது நேரத்தில் ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது. அங்கு உள்ள ஓடுபாதைகளை சேதப்படுத்தியதாகவும், இரண்டு குடியிருப்புகள் அருகே ராக்கெட் தாக்குதல் நடத்தியதாகவும் கூறியது.

சிரியா தாக்குதல்: சிரியாவின் இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுக்கவில்லை. ஏற்கவும் இல்லை. ஏகப்பட்ட ராக்கெட்டுகளை இஸ்ரேல் மாறி மாறி சிரியா மீது ஏவியதாக கூறப்படுகிறது. சிரியாவில் ஹெஸ்புல்லா படையினர் உள்ளனர். இவர்கள் ஈரான் ஆதரவு போராளிகள். இவர்கள்தான் பாலஸ்தீனத்தில் ஹமாஸ் படைக்கு உதவி செய்வதாக கூறப்பட்டது. இவர்களின் ஆதரவின் பெயரிலேயே ஹமாஸ் படைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில்தான் சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது.
தூதரக அட்டாக்: இந்த தாக்குதலுக்கு இடையில்தான் சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அங்கே ஈரான் ராணுவ அதிகாரிகளின் கூட்டம் அப்போது நடந்தது. பாலஸ்தீன போரில் ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீன போராளி குழுக்களுக்கு உதவிய நிலையில் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியது.
ஈரானிய இராணுவத் தளபதிகள் டமாஸ்கஸில் உள்ள ஈரானின் தூதரக வளாகத்திற்குள் ஒரு உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்டுவது பாதுகாப்பானது என்று நினைத்து அங்கே கூட்டம் நடத்திக் கொண்டு இருந்தனர். , சர்வதேச விதிமுறைகளின் படி தூதரகங்களை தாக்க கூடாது. இதனால் அங்கே ஈரான் ராணுவ அதிகாரிகளின் கூட்டம் நடந்தது.
ஆனால் சர்வதேச யுஎன் விதிகளை மீறி தூதரக வளாகத்தின் மீது வான்வழித் தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபட்டது. இதில் ஏழு ஈரானிய அதிகாரிகள் கொல்லப்பட்டனர். ஈரானின் உயர்மட்ட ராணுவ அதிகாரிகளின் ஒருவரான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி கொல்லப்பட்டார். இவர் புரட்சிகர காவல்படையின் (IRGC) மூத்த தளபதி ஆவார்.
ஈரான் பதிலடி: இந்த தாக்குதலுக்குத்தான் தற்போது ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. இஸ்ரேல் ஈரான் இடையே பயங்கரமான போர் மூண்டுள்ளது. இத்தனை நாள் இரண்டு நாடுகளுக்கு இடையில் புகைச்சல் இருந்து வந்த நிலையில் தற்போது இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.
200 ஏவுகணைகளை டிரோன்கள் உதவியுடன் இஸ்ரேல் மீது ஈரான் ஏவி உள்ளது. இதுவரை 200க்கும் மேற்பட்ட ஈரானிய ஆளில்லா விமானங்கள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டுள்ளன. இந்த ஏவுகணைகள் இன்னும் இஸ்ரேலை அடையவில்லை. விரைவில் அவை இஸ்ரேல் மீது சென்று தாக்குதலை ஏற்படுத்தும். சில ஏவுகணைகள் தற்போதைக்கு இஸ்ரேலின் ராணுவ தளவாடங்களை தாக்கி லேசான சேதங்களை ஏற்படுத்தி உள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
பதிலடி கொடுக்க முடிவு: இதற்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. அதன்படி நேற்று நடந்த அதிபர் - பிரதமர் - ராணுவ தளபதி உள்ளிட்டோருக்கான் உயர்மட்ட கூட்டத்தில் பதிலடி கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஈரானுக்கு பயங்கர பதிலடி கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இது என்ன பதிலடி என்று தெரியவில்லை.
இந்த பதிலடி மோசமாக இருக்கும் பட்சத்தில் அது மூன்றாம் உலகப்போருக்கு வித்திடுமோ என்ற கேள்விகளை எழுப்பி உள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையிலான போர்தான் இந்த ஈரான் தாக்குதலுக்கு காரணம். பாலஸ்தீனத்தை இஸ்ரேல் விடாமல் தாக்கி வந்தது ஈரான் விரும்பவில்லை. இந்த போர் பாலஸ்தீனத்திற்கு ஈரான் மறைமுகமாக உதவி வந்தது. இப்போது நேரடியாக இது இஸ்ரேல் - ஈரான் போராக மாறி உள்ளது.
-
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications