வளைகுடாவில் நிறம் மாறும் பூக்கள்.. இஸ்ரேலுக்கு கிரீன் சிக்னல்.. அமெரிக்கா ஹேப்பி அண்ணாச்சி
ஜெருசேலம்: தங்கள் நாட்டுடனான உறவை இயல்பாக்குவதற்கு சவுதி அரேபியா, வங்கதேசம் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் தயாராக இருக்கின்றன என இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
ஜெருசேலம் நகரத்தை உரிமை கொண்டாடும் விவகாரத்தில் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் தற்போது வரை நீடித்து வருகிறது. இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக்கொள்வதால் இரு நாட்டிலும் பொருளாதார பிரச்னைகள் மேலெழுந்துள்ளன. இதை முக்கியமாக காரணமாக முன்னிறுத்தி அடிக்கடி இஸ்ரேலின் போக்கை சவுதி உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் விமர்சித்து வருகின்றன. அவ்வளவு ஏன் கடந்த 1948ம் ஆண்டு இஸ்ரேல் உருவானதிலிருந்து அதை சவுதி அரேபியா அங்கீகரிக்கவில்லை.

சவுதி மட்டுமல்லாது இதுவரை அல்ஜீரியா, கொமரோஸ், ஜிபூட்டி, ஈராக், குவைத், லெபனான், லிபியா, மொரிட்டானியா, ஓமன், கத்தார், சோமாலியா, சிரியா, துனிசியா மற்றும் ஏமன் ஆகிய அரபு லீக்கின் 15 உறுப்பு நாடுகளும் இஸ்ரேலை அங்கீகரிக்கவில்லை. அதேபோல ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், புருனே, இந்தோனேசியா, ஈரான், மலேசியா, மாலத்தீவுகள், மாலி, நைஜர் மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளும் இஸ்ரேலின் யூத அரசை அங்கீகரிக்கவில்லை. இந்த நாடுகளுடன், கியூபா, வட கொரியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளும் இன்னும் அந்த நாட்டை அங்கீகரிக்கவில்லை.
எனவே இந்த பிரச்னையை சரி செய்து உலக நாடுகளுடன், குறிப்பாக இஸ்லாமிய நாடுகளுடன் நட்புறவை வளர்க்க இஸ்ரேல் தொடர்ந்து முயன்று வருகிறது. இந்நிலையில், இது குறித்து பேசிய அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹன், "ஏழு இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலுடனான உறவை இயல்பாக்குவதற்கும், அதை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதற்கும் தயாராக இருக்கின்றன" என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே ஆபிரகாம் உடன்படிக்கையில் நான்கு நாடுகள் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இஸ்லாமிய-கிறிஸ்தவ-யூத மதங்களை சேர்ந்த நாடுகளை ஒருங்கிணைப்பதுதான் இந்த ஆபிரகாம் உடன்படிக்கையின் நோக்கமாகும். அதேபோல இந்த நாடுகளுக்கிடையேயான இராஜதந்திர உறவுகளை மேம்படுத்துவதையும் இது நோக்கமாக கொண்டிருக்கிறது. இந்த உடன்படிக்கை எட்ட அமெரிக்கா முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும் இந்தியாவின் வர்த்தக சந்தையை அமெரிக்கா கைப்பற்ற தொடர்ந்து முயன்று வருகிறது. ஆனால் இஸ்ரேலுடன் மற்ற நாடுகள் சேராமல் இருப்பதால், இந்தியாவுடன் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் மிகப் பெரிய ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படாமல் போக வாய்ப்பிருக்கிறது. எனவே ஆபிரகாம் உடன்படிக்கையில் மற்ற நாடுகளை இணைப்பதில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது.
தற்போது சவுதி அரேபியா, வங்கதேசம், சூடான், புருனே, சோமாலியா, மொராக்கோ, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரவு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் இஸ்ரேலுடன் உறவை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications