இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்தம்.. டிரம்ப் அறிவித்ததும் நடந்த அதிரடி மாற்றம்.. சரிந்த கச்சா எண்ணெய் விலை
தெஹ்ரான்: அமெரிக்க அதிபர் டிரம்பின் போர் நிறுத்த அறிப்பைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை அதிரடியாக சரியத் தொடங்கியுள்ளது.
இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே கடுமையான மோதல் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்தது. காசா மீது தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல், ஈரான் பயங்கரவாதிகளுக்கு உதவி வருகிறது என்று கூறி கடந்த வாரம் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதலை மேற்கொண்டது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வந்தது. இரு நாடுகளும் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில் உயிரிழப்புகளும், சேதங்களும் அதிகரித்து வந்தன.

இதைத்தொடர்ந்து, இஸ்ரேலின் கோரிக்கையை ஏற்று ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்த மோதலுக்குள் அமெரிக்காவும் நுழைந்ததால் கடும் பதற்றம் ஏற்பட்டது. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் நாட்டின் மூன்று அணுசக்தி நிலையங்கள், ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.
ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று அணு அமைப்புகள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி முடிக்கப்பட்டது என்று டிரம்ப் தெரிவித்தார். இதனால் உலகப்போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது. அமெரிக்காவின் தாக்குதல் நடவடிக்கையால் உச்சகட்ட கோபமடைந்த ஈரான், கத்தாரில் தோகாவில் உள்ள அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான அல்-உதெய்த் விமான தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
ஆனால், இந்த தாக்குதலை கத்தார் சமாளித்துவிட்டதாகவும் பெரிய அளவு பாதிப்பு இல்லை எனவும் கூறப்படுகிறது. ஈரானின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா மீண்டும் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாறாக இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நிறுத்தம் வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஆனால், தற்போதைக்கு போர் நிறுத்தம் குறித்த எந்த ஒப்பந்தமும் இல்லை என்று ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதில் ஒரு நல்ல செய்தியாக, இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக அதிகரித்திருந்த கச்சா எண்ணெய் விலை தற்போது மீண்டும் சரியத் தொடங்கியுள்ளது. டிரம்பின் போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஆசிய வர்த்தகத்தின் தொடக்கத்தில் 5 சதவிகிதம் சரிந்து, 68 டாலராகக் குறைந்துள்ளது. இந்த விலை, போர் தொடங்கிய நாளான ஜூன் 12 ஆம் தேதியில் இருந்ததைவிட மிகவும் குறைவாகும்.
-
ஹார்முஸில் கப்பல் போக ஆரம்பித்த அடுத்த நொடி.. ஈரான் கைகளுக்கு வரும் பல கோடி டாலர்! எப்படி? -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
டிரம்ப்-ன் 80வது பிறந்தநாள்.. சண்டையில் துவங்கி சண்டையில் முடிந்தது.. எப்படி? -
நெதன்யாகு சாயம் வெளுத்தது.. ஈரான் நினைத்தால் இஸ்ரேல் 2 மணிநேரத்தில் காலி.. டிரம்ப் பேச்சால் ஷாக்! -
14 பாயின்ட்.. மொத்த போரும் முடிவுக்கு வந்தது.. கதவை திறங்க, கப்பல் கிளம்பட்டும்! -
மீண்டும் குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. டிரம்புக்கு தலைவலியாக மாறிய பெஞ்சமின் நெதன்யாகு! -
விடியல் பிறக்கிறது.. ஈரான் போர் முடிவு.. டிரம்ப் உடன் ராசியான முஜ்தபா கமேனி.. இவரே சொல்லிட்டாரா? -
இந்தியாவுக்கு சிக்கல் தொடரும்.. ஹார்முஸ் திறக்கப்பட்டாலும் கூட எல்லா பிரச்சனையும் உடனே தீராது! -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications