தன் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்ட இஸ்ரேல்! சிங்கம் மாதிரி ஈரான்! ஒரு நாளைக்கு மட்டும் இவ்வளவு செலவா?
டெஹ்ரான்: இஸ்ரேல் ஈரான் போர் ஏற்பட்டு 9 நாட்கள் ஆகி உள்ள நிலையில் இஸ்ரேல் மீதான தாக்குதலை ஈரான் தீவிரப்படுத்தி இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க ஒரு நாளைக்கு மட்டும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை இஸ்ரேல் செலவழித்து வருவதாக கூறப்படுகிறது.
பரபரப்பாக இருக்கிறது மத்திய கிழக்கு. காசாவின் ஹமாஸ் இயக்கத்தினரின் மீதான தாக்குதலை தொடர்ந்து, தனது கவனத்தை ஈரான் பக்கம் திருப்பியது இஸ்ரேல். ஆனால் யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்ட கதையாக இஸ்ரேல் ராணுவத்துக்கு ஈரான் கடுமையாக பதிலடி கொடுத்து வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை ஈரான் மீது இஸ்ரேல் அத்துமீறி தாக்குதல் நடத்திய நிலையில் பதிலடியாக சனிக்கிழமை முதல் தற்போது வரை ஈரான் ராணுவம் இஸ்ரேல் மீது, பாலிஸ்டிக், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குரல் கொடுத்திருந்தாலும் இதுவரை ராணுவ ரீதியாக துணை செய்யவில்லை.

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தாக்குதல் நடத்தினால் பதிலடி கடுமையாக இருக்கும் என ஈரான் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் எதிர்பார்த்ததை விட கடுமையான பதிலடியை ஈரான் கொடுத்து வருகிறது. எட்டு நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வரும் நிலையில் இஸ்ரேலுக்கு கடுமையான சேதத்தை ஈரான் ஏற்படுத்தியுள்ளது. மழை போல ஈரானின் ஏவுகணைகள் பாய்ந்து வருகிறது. இதனால் டெல் அவிவ் உள்ளிட்ட பல நகரங்கள் தீக்கிரையாகி உள்ளன.
இப்படி ஒரு பதிலடியை இஸ்ரேல் ராணுவமும் எதிர்பார்க்கவில்லை என கூறப்படுகிறது. இஸ்ரேல் வசம் இருக்கும் அயர்ன் டோம் உள்ளிட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளையும் அழித்துவிட்டதாக ஈரான் கூறி இருக்கும் நிலையில் வான் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது. இரு நாடுகள் இடையேயான போரில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு இருக்கின்றனர். ஈரான் தரப்பில் 600 பேரும், இஸ்ரேல் தரப்பில் 20 பேரும் உயிரிழந்ததாகவும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே இஸ்ரேல் பகுதிகளில் அதிக சேதத்தை ஏற்படுத்தும் வகையில் சிறியதாக குண்டுகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் முதன்முறையாக கிளஸ்டர் குண்டுகளையும் பயன்படுத்தியதாக சொல்லப்படும் நிலையில் தாக்குதலை தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே ஈரான் மீதான போரில் இஸ்ரேல் ஈரானுக்கு எதிரான போரில் செலவிட்ட தொகை குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுவரை ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவாகி இருக்கும் வகையில் ராணுவ நடவடிக்கைக்காக மட்டும் ஒரு நாளைக்கு ஒரு பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 8659 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தலைமை தளபதியின் முன்னாள் நிதி ஆலோசகரான ரிம் அவினாஷ் தெரிவித்துள்ளார். முதல் 48 மணி நேரத்திற்கு மட்டும் 12 ஆயிரம் கோடி செலவிடப்பட்டதாகவும், இது செலவிடப்பட்ட தொகை மட்டும் தான். நாட்டில் ஏற்பட்ட உட்கட்டமைப்பு பாதிப்பு, உற்பத்தி பாதிப்பு ஆகியவை சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில் மத்திய கிழக்கிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த போரால் எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு பல்வேறு உலக நாடுகளும் கடுமையாக சிரமத்தை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. எனவே அமைதி பாதைக்கு திரும்ப வேண்டும் என ஈரானையும் இஸ்ரேலையும் ஐநா கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
இருளில் மூழ்கும் நாடுகள்.. அதிர்ச்சி கொடுக்கும் 'எரிசக்தி அவசரநிலை'.. Energy Emergency என்றால் என்ன? -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
பஹ்ரைனில் சொதப்பிய US! பாதுகாப்பு டெக்னாலஜியில் பெரிய ஓட்டை! குடியிருப்புக்குள் பாய்ந்த ஏவுகணை -
இந்தியாவிடம் உள்ள கச்சா எண்ணெய் இருப்பு வெறும் 10 நாட்களுக்கு கூட தாங்காது? அதிர்ச்சி RTI தகவல் -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
படக்குனு 10 கிராம் வாங்கிப் போடுங்க மக்களே! சட்டுனு சரிந்த தங்கத்தின் விலை.. இன்னும் சரியப் போகுதாம்












Click it and Unblock the Notifications