கிட்டத்தட்ட கெஞ்சாத குறையாக! அமெரிக்காவிடம் மன்றாடி நின்ற இஸ்ரேல்! போருக்குள் இழுக்க பயங்கர திட்டம்

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்கா இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று இஸ்ரேல் தொடர்ந்து மன்றாடி வருகிறது. ஈரான் அமெரிக்காவிற்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது.. என்று அவர் எச்சரித்துள்ளார்.

Israel Iran

'நல்லதின் பக்கம் அமெரிக்கா நிற்க வேண்டும்' - இஸ்ரேல் பிரதமர்

நெதன்யாகு அளித்த ஒரு பேட்டியில், ஈரானின் அணு ஆயுத திட்டத்தை ஒழிப்பது இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு மட்டுமல்ல, உலகளாவிய பாதுகாப்பிற்கும் முக்கியமானது.

இன்று டெல் அவிவ் என்றால், நாளை நியூயார்க். 'அமெரிக்கா முதலில்' என்று அமெரிக்கர்கள் கருதுகிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் இப்படியே விட்டால் அடுத்து அமெரிக்காவும் இருக்காது. இஸ்ரேலை தாக்கும் ஈரான் அடுத்து அமெரிக்காவையும் தாக்கும்.

அவர்கள் 'அமெரிக்காவுக்கு மரணம்' என்று கோஷமிடுகிறார்கள். கண்டிப்பாக அமெரிக்காவையும் தாக்குவார்கள். இதை அமெரிக்கா தடுக்க வேண்டும். அதற்கு ஈரானை அமெரிக்கா தாக்க வேண்டும். மனித குலத்திற்கு நன்மை செய்யக்கூடிய ஒன்றை நாங்கள் செய்கிறோம். இது நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போர். டொனால்ட் ட்ரம்ப் நல்லதின் பக்கம் நிற்க வேண்டும், என்று பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

கெஞ்சும் இஸ்ரேல்

கிட்டத்தட்ட கெஞ்சாத குறையாக அமெரிக்காவை போருக்குள் இழுக்க இஸ்ரேல் முயன்று வருகிறது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்கா இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். நியூயார்க்கை தாக்க போகிறார்கள், அமெரிக்காவை அழிக்க போகிறார்கள் என்றெல்லாம் சொல்லி.. அமெரிக்காவை எப்படியாவது போருக்குள் இழுத்துவிட வேண்டும் என்று இஸ்ரேல் தீவிரமாக முயன்று வருகிறது.

ஈரான் மீதான தாக்குதலில், முக்கியமாக ஈரானின் அணு மையங்கள் மீதான தாக்குதலில் அமெரிக்கா தங்களுக்கு உதவ வேண்டும் என்று இஸ்ரேல் கோரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவை அதிகாரபூர்வமாக போருக்கு அழைத்து உள்ளது இஸ்ரேல்.

ஈரானின் ஃபோர்டோவ் யுரேனியம் செறிவூட்டும் தளத்தை அழிக்க இஸ்ரேலும் திட்டமிட்டு வருகிறது. ஆனால் இஸ்ரேலிடம் போதுமான பதுங்கு குழி தகர்ப்பு வெடிகுண்டுகளோ அல்லது பெரிய குண்டுவீச்சு விமானங்களோ இல்லை. ஃபோர்டோவ் தளம் மலையின் கீழ் ஆழமாக கட்டப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவிடம் ஈரானுக்கு பறந்து சென்று தாக்கக்கூடிய விமானங்கள் மற்றும் வெடிகுண்டுகள் உள்ளன.

டிரம்ப் நிர்வாகம் இஸ்ரேலின் நடவடிக்கையிலிருந்து இதுவரை விலகியே உள்ளது. இஸ்ரேலின் தாக்குதலை ஆதரித்தாலும்.. நாங்கள் இந்த தாக்குதலுக்கு உதவவில்லை என்றே அமெரிக்கா கூறி வருகிறது. இஸ்ரேலின் இந்த தாக்குதலில் அமெரிக்காவின் ஈடுபாடு அல்லது உதவி எதுவும் இல்லை என்று அமெரிக்கா உறுதியாக கூறி உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில்தான் அமெரிக்காவை அதிகாரபூர்வமாக போருக்கு அழைத்து உள்ளது இஸ்ரேல். ஈரான் மீதான தாக்குதலில் தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று இஸ்ரேல் அமெரிக்காவிற்கு அதிகாரபூர்வ கோரிக்கை விடுத்துள்ளது. இதில் அமெரிக்கா உதவி செய்யும் பட்சத்தில் அது உலகப்போராக வெடிக்கும் அபாயங்கள் உள்ளன.

இந்த விவகாரம் மிகப்பெரிய போராக மாறும் வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய 'ஆபரேஷன் லயன்' தாக்குதலை ரஷ்யா கண்டித்துள்ளது. இந்த தாக்குதல் மிக மோசமானது எனவும், ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும், இது பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்கும் எனவும் எச்சரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+