வெளியே மருத்துவமனை.. உள்ளே குவியல் குவியலாக ஆயுதங்கள்.. காசா மருத்துவமனை வீடியோவை வெளியிட்ட இஸ்ரேல்

Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், காசாவில் இருக்கும் முக்கிய மருத்துவமனையில் இருந்து ஹமாஸ் ஒரு பரபர வீடியோவை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. முதலில் இந்த தாக்குதலை ஆரம்பித்தது ஹமாஸ் என்றாலும் கூட, இஸ்ரேல் ராணுவம் உடனடியாக பதிலடி கொடுத்து தீவிர தாக்குதலை ஆரம்பித்துவிட்டது.

 Israel is launching steep attack in hospital in Gaza strip

காசா மீது தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதலை நடத்திய இஸ்ரேல், படையெடுப்பையும் ஆரம்பித்தது. தங்கள் நாட்டை தாக்கிய அனைத்து ஹமாஸ் வீரர்களையும் கொன்றே தீருவேன் என்ற முனைப்பில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

காசா மருத்துவமனைகள்: இப்படிக் காசா மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் மிகப் பெரிய சர்ச்சையாகிறது. ஏனென்றால் பொதுவாக எந்தவொரு போர் என்றாலும் மருத்துவமனைகள் போலப் பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்படாது. ஆனால், இஸ்ரேல் தொடர்ச்சியாகக் காசா மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவது சர்ச்சையானது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே ஹமாஸ் சுரங் பாதைகளின் கட்டுப்பாட்டு மையங்கள் இந்க மருத்துவமனைகள் அடியில் தான் உள்ளதாக இஸ்ரேல் பரபர குற்றச்சாட்டை முன்வைத்தது. இதற்கு ஆதாரமாக இஸ்ரேல் அங்கிருந்து எடுக்கும் பல வீடியோக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. இதற்கிடையே பயங்கரவாத செயல்களில் ஈடுபடத் தேவையான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களைச் சேமித்து வைக்க ஹமாஸ் படை மருத்துவமனைகளைப் பயன்படுத்துவதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

இஸ்ரேல் ராணுவம்: இது தொடர்பாக இப்போது இஸ்ரேல் ராணுவம் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளனர்.. அல்- ஷிஃபா மருத்துவமனையில் உள்ள கட்டிடத்தை ஹமாஸ் படை கட்டளை மையமாகப் பயன்படுத்தி வருவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. அங்கே 2000 பேர் இருப்பது போலக் காட்டி, அவர்களுக்குப் பின்னால் ஹமாஸ் படை பதுங்கி இருப்பதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள வீடியோவில் அந்நாட்டின் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜொனாதன் கான்ரிகஸ், ஒளிப்பதிவாளர்களுடன் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஹமாஸின் ஆயுதக் கிடங்கில் நுழைகிறார். மருத்துவமனை வளாகத்தில் ஹமாஸ் எப்படி ஆயுத கிடங்கை வைத்துள்ளது என்பதை அவர் விளக்குகிறார். ஒரு நொடி கூட எடிட் செய்யாமல் இந்த வீடியோவை அப்படியே எடுத்து வெளியிட்டுள்ளதாக இஸ்ரேல் குறிப்பிடுகிறது.

ஏகே 47: அவர் மேலும் கூறுகையில், "எந்தவொரு சந்தேகமும் வேண்டாம். ஹமாஸ் வேண்டுமென்றே திட்டமிட்டு, தனது ராணுவ நடவடிக்கைகளுக்கு மருத்துவமனைகளைப் பயன்படுத்துகிறது" என்றார். மேலும், அவர்கள் எம்ஆர்ஐ ஸ்கேன் ரூம்களில் உள்ள ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைக் காட்டுகிறார்கள். மேலும், அங்கு மருத்துவமனையில் இருந்த பை ஒன்றில் ஏகே 47 துப்பாக்கிகள் இருப்பதும் தெளிவாகத் தெரிகிறது.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இந்த ஆயுதங்களுக்கு மருத்துவமனையில் என்ன வேலை. ஹமாஸ் இந்த மருத்துவமனையைச் சேமிப்பு கிடங்கு போலப் பயன்படுத்தி உள்ளனர். அதைத்தான் இது காட்டுகிறது. இது ஒரு இடம் இல்லை. பல மருத்துவமனைகள் மற்றும் ஆம்புலன்ஸ்களை அவர்கள் சட்டவிரோதமாக ராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள்" என்றார்.

முன்னதாக காசாவில் உள்ள ரான்சி மருத்துவமனையிலும் எப்படி ஹமாஸ் ஆயுதங்களைச் சேமித்து வைக்கிறார்கள் என்பதை விளக்கி இஸ்ரேல் இதேபோன்ற ஒரு வீடியோவை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+