இஸ்ரேலை தைரியமாக எதிர்க்கிறதே ஹமாஸ்.. எந்தெந்த உலக நாடுகள் ஆதரவு உள்ளது தெரியுமா?
இஸ்ரேல்: பாலஸ்தீனம்-இஸ்ரேல் இடையே போர் தொடங்கி உள்ளது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இன்று இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளனர். இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வரும் நிலையில் போர் உருவாகி உள்ளது. இந்நிலையில் தான் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகளின் பட்டியல் குறித்து இதோ ஒரு பார்வை.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே தொடர்ந்து நடந்து வந்த மோதல் இன்று உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் தீவிரவாத அமைப்பு இன்று இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதனால் காசா பகுதியில் பாலஸ்தீனம்-இஸ்ரேல் இடையே பதற்றம் நிலவி வருகிறது. அதிகாலை முதல் 5000க்கும் அதிகமான ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாத அமைப்பு ஏவியுள்ளது. இது பாலஸ்தீனத்தின் ஆதரவுடன் இயங்கி வரும் அமைப்பாகும்.
மேலும் ஹமாஸ் பயங்கரவாதிகள் பாரசூட் மூலம் இஸ்ரேலுக்குள் ஊடுருவியுள்ளனர். இதனால் இருநாடுகள் இடையே போர் உருவாகி உள்ளது. இஸ்ரேல் ‛ஸ்டேட் ஆப் வார்' என அறிவித்து பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் மீது வான்வெளி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்டுள்ள இந்த போர் என்பது ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இந்நிலையில் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவம் பல நாடுகள் இறங்கி உள்ள தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக ஈரான், கத்தார், துருக்கி, சிரியா, லெபனான், எகிப்து, சூடான், மலேசியா, இந்தோனேசியா, அல்ஜிரியா, துனிசியா, மொராக்கோ உள்ளிட்ட நாடுகள் ஆதரவாக இருப்பதாக மேலை நாடுகள் குற்றம்சாட்டி உள்ளன.
இதில் ஈரான், கத்தார் உள்ளிட்ட நாடுகள் நிதி மற்றும் ராணுவ உதவிகளை ஹமாசுக்கு வழங்கி வருவதாகவும், துருக்கி, எகிப்து உள்பட பிற நாடுகள் அதிகாரிகள் மட்டத்திலும், ஹமாஸ் தீவிரவாதிகளை சேர்ந்தவர்களை அந்நாடுகளின் எல்லையில் செயல்பட அனுமதிப்பதாக மேலை நாடுகள் குற்றம் சுமத்தி உள்ளன.
அதேவேளையில் சில நாடுகள் ஹமாசின் செயல்பாட்டுக்கு மட்டுமே ஆதரவை தெரிவித்துள்ளன. அதாவது நிதி, ராணுவம் உள்ளிட்ட உதவிகளை வழங்காமல் ஹமாசின் செயல்பாட்டை ஆதரிக்கின்றன. உதாரணமாக எகிப்து தனது நாட்டின் ஹமாஸ் செயல்பாட்டை அனுமதிக்காத நிலையில் தற்போது ஹமாசின் தாக்குதலுக்கு ஆதரவாக உள்ளதை நாம் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
அதேபோல் சில மேலை நாடுகள் ஹமாசுக்கு எதிராக உள்ளன. அதன்படி பார்த்தால் அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரிட்டன், இஸ்ரேல், நியூசிலாந்து, பராகுவே உள்ளிட்ட நாடுகள் ஹமாசுக்கு எதிராக இருக்கின்றன. இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் அமெரிக்கா ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதிக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்கிறது. ஆனாலும் கூட இஸ்ரேல் மீதான ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலை அவர்கள் ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஹமாஸ் அமைப்பை பொறுத்தமட்டில் சில நாடுகள் அதனை தீவிரவாத அமைப்பாக அங்கீகரித்துள்ளன. அதேவேளையில் பல நாடுகள் ஹமாஸ் என்பது ஒரு அரசியல் கட்சி போன்றது எனவும், சட்டத்துக்கு உட்பட்டு செயல்படும் இயக்கம் என்பதையும் அங்கீரித்துள்ளன. இதனால் தான் காசாவை கட்டுப்பாட்டில் வைத்து செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பு தொடர்பாக உலக நாடுகளால் ஒரே மாதிரியான முடிவை எடுக்க முடியாத சூழல் நிலவி வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications