இஸ்ரேல்-ஹமாஸ் போரால் தெறிக்கும் ரத்தம்.. பாலஸ்தீனத்தில் இந்தியர்களுக்கு 24*7 உதவி எண்கள் அறிவிப்பு!
அவிவ்: இஸ்ரேல் - ஹமாஸ் போரில் உயிர் பலிகள் அதிகரித்து வருவது உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் பாலஸ்தீனத்தில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோருக்கான அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கும் நடுவில் இருக்கும் காசாவில் வாழும் மக்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் காசாவில் செயல்பட்டு வரும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ஆம் தேதி காலையில், 20 நிமிடத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்தி தாக்குதல் நடத்தினர்.

மேலும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் மற்றும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த அப்பாவி மக்கள் பலரையும் ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாகப் பிடித்துச் சென்றுள்ளனர். ஹமாஸின் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் கடுமையான பதிலடியை கொடுத்து வருகிறது. இந்த தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் வசித்து வரும் ஏராளமான இந்தியர்களின் குடும்பத்தினர் பதைபதைப்பில் இருந்து வருகின்றனர். இஸ்ரேலில் சிக்கிய இந்தியர்கள் மீட்க இஸ்ரேல் தூதரகம் மூலம் இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு 24 மணி நேர அவசரகால உதவிக்கு 972-35226748, 972-543278392 உள்ளிட்ட எண்களை தொடர்பு கொள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேலில் உள்ள சுமார் 20,000 இந்தியர்களும் பாதுகாப்பாக அவர்கள் தங்கியுள்ள இடத்திலேயே இருக்க வேண்டும் என இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதலும் தீவிரமடைந்துள்ளதால், பாலஸ்தீனத்தில் ரமல்லாவில் உள்ள இந்தியப் பிரதிநிதி அலுவலகம், புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கான அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது. பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்கள், அவசர உதவி தேவைப்பட்டால் 0592-916-418 என்ற தொலைபேசி எண்ணிலும், +970-592916418 எண்ணில் வாட்ஸ்அப் வாயிலாகவும், 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், [email protected] மற்றும் [email protected] ஆகிய இமெயில் மூலம் தொடர்புகொண்டு உதவியை பெறலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் உள்ள இந்திய பிரதிநிதி அலுவலக தொலைபேசி எண்களிலும் 00970-2-2903033/4/6 தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அது வேற வாய்.. இது வேற வாய்! பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான்! அடுத்த நாளே திடீர் ட்விஸ்ட்! என்ன? -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications