போர்க்குணம் + உளவு.. அமெரிக்கா, இஸ்ரேலையே கதறவிடும் ஹமாஸ் இயங்குவது எப்படி? கொரில்லா ஸ்டைல் பின்னணி
காசா: மேற்கு உலகையே தற்போது ஹமாஸ் படை கதற வைத்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய சர்ப்ரைஸ் தாக்குதல் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளை அதிர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
இஸ்ரேல் எதிர்கொண்ட மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாக.. இஸ்ரேல் வரலாற்றில் அந்த நாடு எதிர்கொண்ட போர் அல்லாத பெரிய தாக்குதலாக இந்த ஹமாஸ் தாக்குதல் பார்க்கப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பழி வாங்கியே தீருவோம். ஹமாஸ் இயக்கத்தை மொத்தமாக அழிப்போம்.

காசா இருந்த சுவடே இல்லாமல் ஆக்க போகிறோம். காஸாவில் இருக்கும் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும். நாங்கள் மிக பெரிய தாக்குதலை நடத்த போகிறோம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது இந்த பிரம்மாண்ட தாக்குதலை நடத்திய ஹமாஸ் இயக்கம் எப்படி இயங்குகிறது.. இவர்களை ஏன் மேற்கு உலகால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை பாப்போம்.
எப்படி தோன்றியது: இஸ்ரேலில் 1995ல் செய்யப்பட்ட ஓஸ்லோ ஒப்பந்தம்தான் ஹமாஸ் வளர்ச்சி அடைய முக்கிய காரணமாக அமைந்தது. அந்த ஒப்பந்தத்தின்படி வெஸ்ட் பேங்க், பாலஸ்தீனத்தின் பெரும்பகுதி இஸ்ரேல் கட்டுப்பாட்டில் வந்தது. பாலஸ்தீன விடுதலையில் பிஎல்ஓ என்ற அமைப்புதான் அத்தனை காலம் போராடி வந்தது.
அவர்கள் சரியாக போராடவில்லை என்று கூறி.. அவர்களுக்கு பதிலாக ஆயுதம் தாங்கிய அமைப்பான ஹமாஸ் படையும் காசாவில் களமிறங்கியது. அருகில் எகிப்தில் தோன்றிய அந்த படை.. பாலஸ்தீன சுதந்திரத்திற்காக காஸாவிற்கு சென்றது. ஹமாஸ் 1987 இல் நிறுவப்பட்டது, எகிப்தின் முஸ்லீம் சகோதரத்துவ இயக்கம் என்ற பெயரில் இந்த குழு தோன்றியது. இது 1950 களில் இருந்து காசா பகுதியில் தீவிரமாக செயல்பட்டு பல்வேறு தொண்டு மற்றும் சமூக அமைப்புகளின் நெட்வொர்க் மூலம் செல்வாக்கைப் பெற்றது.
1980 களில் ஹமாஸ் இயக்கம் ஒரு சக்திவாய்ந்த அரசியல் காரணியாக மாறியது, PLO வின் செல்வாக்கை மீறி இந்த அமைப்பு வளர்ந்தது. அதன்பின் 2000-2005 வரை காஸாவிலும், ஜெருசலேமிலும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் 2005ல் காசாவில் இருந்து இஸ்ரேல் வெளியேறியது. காஸா ஹமாஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் கீழ் உள்ளது. ஆனால் காஸாவின் அனைத்து எல்லைகளும் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ளது.
தேர்தல் நடத்துவார்கள்: ஹமாஸ் என்பதை மேற்கு உலகம் தீவிரவாத அமைப்பு என்று சொன்னாலும் பல்வேறு உலக நாடுகள் அப்படி சொல்வது இல்லை. அவர்களை பொறுத்தவரை ஹமாஸ் என்பது பாலஸ்தீன விடுதலை அமைப்பு ஆகும். இவர்கள் எந்த அளவிற்கு ஜனநாயக ரீதியான அமைப்பு என்றால்.. இவர்கள் தேர்தல் நடத்துவார்கள்.. பல்வேறு துறைகளுக்கு அமைச்சர்களை போடுவார்கள்., காஸாவில் நேர்மையாக மக்கள் அதிகார ஆட்சியை நடத்தி வருகிறார்கள்.
தீவிரவாத அமைப்பு போல.. பலம் வாய்ந்த ஒற்றை தலைவர் இல்லை என்பதால் இவர்களையோ அழிக்கவும் முடியாது., உதாரணமாக 2006ல் காஸா தேர்தலில் ஹமாஸ் படை வென்று ஆட்சியை பிடித்தது. ஆனால் இதை ஃபட்டா போன்ற பாலஸ்தீன அமைப்புகளே எதிர்த்தன. இதனால் காஸா ஹமாஸ் கட்டுப்பாட்டிலும், வெஸ்ட் பேங்கின் சியில் பகுதிகள் பாலஸ்தீன விடுதலை அமைப்பு மற்றும் ஃபட்டா அமைப்பின் கட்டுப்பாட்டிலும் வந்தது. ஆனாலும் வெஸ்ட்பேங்க் கிட்டத்தட்ட இஸ்ரேலின் மறைமுக கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இப்போது இந்த மீதமுள்ள வெஸ்ட் பேங்க் பகுதியை இஸ்ரேல் கொஞ்சம் கொஞ்சமாக குடியிருப்புகள் மூலம் ஆக்கிரமித்து வருகிறது.
மாறாக காஸாவில் நிலைமை வேறாக உள்ளது. அங்கே இஸ்ரேல் நுழைய கூட முடிவது இல்லை. அந்த அளவிற்கு ஹமாஸ் அங்கே கட்டுப்பாட்டை கொண்டு உள்ளது. தற்போது ஹமாஸ் படையை தாக்கி, அங்கே முழுக்க முழுக்க எல்லைகளை அடைத்து காஸாவையும் இஸ்ரேல் கட்டுப்படுத்த முயன்று வருகிறது. தற்போது நடந்து வரும் மோதலில் காஸாவை மொத்தமாக கைப்பற்றும் திட்டத்தில் இஸ்ரேல் உள்ளது.
உணவு இல்லாத கொரில்லா படைகள்: தேர்தல் ரீதியாக ஜனநாயக ரீதியாக ஆட்சி செய்யும் ஹமாஸ்.. ஒரு கொரில்லா அமைப்பும் கூட. இவர்களின் போர்க்கொள்கை என்பதை நவீன போர் குணம் + கொரில்லா கொள்கை கொண்டது. இதன் மூலம் இவர்கள் தீரமாக இஸ்ரேல் உள்ளே புகுந்து தாக்குதலும் நடத்துவார்கள். இஸ்ரேலை உள்ளே வர விடாமல் நவீன முறையும் போரும் செய்வார்கள்.
உதாரணமாக இவர்களிடம் மிக நவீன் ஆயுதங்கள், ஏவுகணைகள் உள்ளன. இவை எல்லாம் நவீன போர் முறையின் யுக்தி. அதே சமயம் பல நாட்கள் சாப்பிடாமல் இருந்தாலும் இவர்கள் வெறும் கையால் கூட சண்டை போடும் திறன் கொண்டவர்கள் . இவை எல்லாம் கொரில்லா போர் யுக்தி.
ஆயுதங்களை வாங்குகிறார்கள்: இன்னொரு பக்கம் இவர்கள் ஆயுதங்களை சில உலக நாடுகளிடம் இருந்து வாங்கி வருகின்றனர். எகிப்தில் உள்ள பிளாக் மார்க்கெட் வழியாக வாங்குவது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் இஸ்ரேல் எரியும் ஏவுகணைகள், ஆயுதங்களை மறுசுழற்சி செய்து புதிய ஆயுதங்களை கூட இவர்கள் உருவாக்குகிறார்கள். அந்த அளவிற்கு இவர்களுக்கு பாம் டெக்னாலஜி தெரியும். அந்த அளவிற்கு இவர்களுக்கு போர் தொழில்நுட்பம் தெரியும்.
உளவு அமைப்புகள்: இப்படி போர் முறை.. ஆயுத அறிவியலில் ஆற்றல் கொண்ட ஹமாஸ் இயக்கத்திடம் மிகப்பெரிய உளவு அமைப்பும், வெளியுறவுத்துறை அமைப்பும் உள்ளது. ஹமாஸ் தங்களை காத்துக்கொள்ள அமெரிக்காவிற்கு எதிரான பல நாடுகளுடன் ரகசிய உறவை வைத்துள்ளது. இதன் மூலம் ராஜாங்க ரீதியாக ஐநா போன்ற இடங்களில் தங்களை ஹமாஸ் பாதுகாத்துக்கொள்கிறது. இன்னொரு பக்கம் இஸ்ரேலை திணறடிக்கும் உளவு அமைப்பும் ஹமாஸிடம் உள்ளது.
அதனால்தான் இஸ்ரேல், அமெரிக்காவிற்கே தெரியாமல்.. ரகசியமாக இவ்வளவு பெரிய தாக்குதலை இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் நடத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications