பெரும்பான்மையை எட்ட முடியாமல் தவிக்கும் நெதன்யாகு.. தேர்தல் திருடப்பட்டு விட்டதாக பரபர குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

ஜெருசலேம்: இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அரபு கட்சிகள் மீது பெஞ்சமின் நெதன்யாகு பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்து உள்ளார். தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக பெஞ்சமின் நெதன்யாகு குற்றச்சாட்டு வைத்துள்ள நிலையில் அதனை அரபு கட்சிகளின் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.

இஸ்ரேல் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 86.86 சதவீத வாக்குப்பெட்டிகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி கூட்டணி 54 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

Israel PM Benjamin Netanyahu allege general election stolen by Arab parties

இவருக்கு கடுமையான சவாலாக விளங்கும் முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசென்கோட் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி 48 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இதனால் ஆட்சி அமைக்க தேவையான 61 இடங்களை எந்த கட்சியும் பெறாத சூழல் ஏற்பட்டுள்ளது. அரபு நாடாளுமன்றக் கட்சிகள் 18 இடங்களைப் பெறும் எனத் தேர்தல் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அரபு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க நெதன்யாகு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால், காடி ஐசென்கோட் தனது சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். இதனால் இரு முக்கிய அணிகளும் இணைந்து 'தேசிய ஒற்றுமை அரசு' அமைக்கலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது. அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் நவம்பர் 4 ஆம் தேதி வெளியாக உள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகு இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார். புதிய பிரதமர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க 28 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். தேவைப்பட்டால் கூடுதலாக 14 நாட்கள் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பெரும் சவால்கள் நீடிக்கும் என்று தெரிகிறது.

இதற்கிடையே, அரபு கட்சிகளால் தேர்தல் திருடப்பட்டுவிட்டதாக பெஞ்சமின் நெதன்யாகு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார். வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர் மோசடி, லஞ்சம், மிரட்டல் மற்றும் வன்முறை உள்ளிட்டவற்றில் அரபு கட்சிகள் ஈடுபட்டதாக பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சாட்டியுள்ளார்.

அரபுக் கட்சிகள் வாக்குச்சாவடிகளில் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், இது தொடர்பாகக் குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும் பெஞ்சமின் நெதன்யாகு கட்சி வலியுறுத்தியுள்ளது. பெஞ்சமின் நெதன்யாகு இந்த குற்றச்சாட்டுகளை அரபு கட்சிகளின் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+