முடிவுக்கு வரும் ஈரான் போர்? இஸ்ரேல் பிரதமர் சொன்ன "அந்த" ஒரு வார்த்தை! உற்று பார்க்கும் உலக நாடுகள்
டெல் அவிவ்: மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய நெதன்யாகு, ஈரான் அழிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும், இப்போது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் சூழலில், தேவையென்றால் நேரடியாக ராணுவத்தை இறக்கவும் ரெடியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடக்கும் போர் கிட்டத்தட்ட 4வது வாரத்தில் நுழைந்துள்ளது. தற்போதைய சூழலில் போர் முடிவதற்கான எந்தவொரு சாத்தியக்கூறுகளும் தெரியவில்லை. இதற்கிடையே ஈரான் போர் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சில முக்கியமான கருத்துகளைக் கூறியுள்ளார்.

முழுமையாக அழிப்போம்
அணு ஆயுதங்களை உருவாக்க தேவையான யுரேனியத்தை செறிவூட்டும் திறன் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தயாரிக்கும் திறன் ஆகியவற்றை ஈரான் இழந்துவிட்டதாகத் தெரிவித்தார். இந்த கூட்டு நடவடிக்கை ஈரானின் ராணுவத் திறன்களைக் கணிசமாகப் பலவீனப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
அவர் மேலும் பேசுகையில், "ஈரான் இப்போது யுரேனியத்தை செறிவூட்டவோ அல்லது பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்கவோ முடியாது. நாங்கள் வெற்றி பெறுகிறோம், ஈரான் அழிக்கப்பட்டு வருகிறது.. இந்த ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களுக்கான தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளையே குறிவைத்து அழித்து வருகிறோம். ஈரானின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானக் கிடங்குகள் பெருமளவில் அழிக்கப்பட்டன.. அவை விரைவில் முழுமையாக அழிக்கப்படும்" என்றார். அதேநேரம் ஈரான் தனது யுரேனிய செறிவூட்டும் திறனை இழந்துவிட்டது எனச் சொன்னதற்கு அவர் எந்தவொரு ஆதாரத்தையும் வழங்கவில்லை.
அமெரிக்கா
இந்த போரில் சம்பந்தமே இல்லாமல் அமெரிக்காவை இஸ்ரேல் தான் இழுத்துவிட்டதாகப் புகார் எழுந்துள்ள சூழலில், நெதன்யாகு அதை மறுத்தார். அவர் மேலும், "அதிபர் டொனால்ட் ட்ரம்ப் என்ன செய்ய வேண்டும் என்று யாராவது உண்மையிலேயே சொல்ல முடியுமா? அமெரிக்காவிற்கு எது நல்லது என்று நினைக்கிறாரோ அதற்கேற்ப டிரம்ப் முடிவுகளை எடுக்கிறார். இந்த விஷயத்தில் நலன்கள் தெளிவானவை; சாதனைகளும் அப்படித்தான். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள், உளவுத் துறை உதவி மற்றும் ஒருங்கிணைப்புடன், மின்னல் வேகத்தில் இலக்குகளை அடைகிறோம். எனவே, நாங்கள் தான் அமெரிக்காவைப் போருக்குள் இழுத்துவிட்டோம் எனச் சொல்வது அபத்தமானது" என்றார்.
உயிரிழந்ததாக வதந்தி
நெதன்யாகு உயிரிழந்துவிட்டதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் பரவியிருந்தது. அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, நெதன்யாகு தனது உரையின் தொடக்கத்தில், "முதலில், நான் உயிருடன் இருக்கிறேன் என்று சொல்ல விரும்புகிறேன்" எனச் சொல்லி தனது உரையைத் தொடங்கினார். மேலும், அமெரிக்கா- இஸ்ரேல் உறவுகளின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்ட அவர், நாங்கள் மத்திய கிழக்கு முழுவதையும் - உலகம் முழுவதையும் பாதுகாக்கிறோம் என்றார். ஈரானைப் பொறுத்தவரைத் தானும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் ஒரே கருத்தைக் கொண்டுள்ளோம் என்றும், ட்ரம்ப்பிற்கு உலகம் நன்றிக் கடன் பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், ட்ரம்ப்பின் கோரிக்கையை ஏற்று, ஈரானின் முக்கிய எரிவாயு வயல்கள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் ஒத்திவைக்கும் என்றும் நெதன்யாகு அறிவித்தார். இந்த போர் காரணமாக ஈரானின் ராணுவ உள்கட்டமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயு வயல் மீதான தாக்குதலுக்கு ட்ரம்ப் ஒப்புதல் அளித்தாரா என்ற கேள்விக்கு, இஸ்ரேல் சுதந்திரமாகச் செயல்பட்டது என்று பிரதமர் நெதன்யாகு பதிலளித்தார்.
ஈரானில் குழப்பம்
அவர் மேலும் பேசுகையில், "ஈரான் தலைமைத்துவத்திற்குள் பிளவுகள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தெரிகிறது. இந்த பிளவுகள் அனைத்தையும் வெளிப்படுத்த முடிந்தால் நன்றாக இருக்கும்.. ஈரானை வீழ்த்த தேவையானவற்றைச் செய்வோம். ஈரான் இதில் இருந்து தப்பிக்கலாம். தப்பிக்காமலும் போகலாம். இதுவரை வான்வழித் தாக்குதல்கள் மூலமாகவே போர் நடத்தப்பட்டு வருகிறது. அதேநேரம் தேவையென்றால் நேரடியாகத் தரைவழி தாக்குதல்களையும் நடத்துவோம். ராணுவத்தையும் இறக்குவோம்.
ஈரானை யார் இப்போது ஆட்சி செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அங்கு உயர் அதிகாரிகளிடையே பதற்றம் நிலவுகிறது. இந்த மோதல் ஒரு கிளர்ச்சிக்கு வழிவகுக்குமா எனக் கேட்டால் அதை இப்போது சொல்ல முடியாது என்பதே பதில். நாம் காத்திருந்து நிலைமையைக் கண்காணிக்க வேண்டும்" என்றார்.
-
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
இந்தியாவிடம் உள்ள கச்சா எண்ணெய் இருப்பு வெறும் 10 நாட்களுக்கு கூட தாங்காது? அதிர்ச்சி RTI தகவல் -
அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! முகத்திலேயே விழுந்த அடி.. கப்பலை கூட அனுமதிக்காத ஈரான்! இதெல்லாம் தேவை தானா -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்!












Click it and Unblock the Notifications