Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனப்படுகொலை செய்யவில்லை! சர்வதேச நீதிமன்றத்தில்.. தென்னாப்பிரிக்கா குற்றச்சாட்டை மறுத்த இஸ்ரேல்

Subscribe to Oneindia Tamil

ஆம்ஸ்டர்டம்: பாலஸ்தீனம் இஸ்ரேல் தொடுத்துள்ள போர் தீவிரமானது என்றும், இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுகிறது எனவும் தென்னாப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தை நாடியிருந்தது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் மறுத்திருக்கிறது.

200 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் ராணுவம், காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது. இதில் 35 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். 75% பேர் குழந்தைகள் என பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

Israel rejects South Africa s accusation that genocide is being committed against Palestine

இந்த போருக்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், தென்னாப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக வழக்கு தொடுத்தது. "காசாவை வரைபடத்தில் இருந்து அழிக்கும் இஸ்ரேலின் நோக்கம் நனவாகி வருகிறது. இஸ்ரேல் இன அழிப்பில் ஈடுபட்டிருக்கிறது. இப்போது ராஃபா வரை இஸ்ரேல் வந்திருக்கிறது. எனவே பாலஸ்தீனர்களை காக்க உடனடியான நடவடிக்கை தேவை" என்று தென்னாப்பிரிக்க சட்டப் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

ஆனால் இஸ்ரேல் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறது. நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியிருந்த இஸ்ரேலின் வழக்கறிஞர் கிலாட் நோம்,

"தென்னாப்பிரிக்காவின் வாதங்கள் அப்பட்டமானதாக இருக்கிறது. இந்தப் போர், எல்லாப் போர்களைப் போலவே, இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் சோகமானது மற்றும் பயங்கரமானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இனப்படுகொலை என்கிற வாதத்தை ஏற்க முடியாது. ஆயுத மோதல் என்பது இனப்படுகொலைக்கு நிகரான சொல் கிடையாது" என்று கூறியுள்ளார்.

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐ நா பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின. இது நாள் வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

போர் காரணமாக காசாவுக்குள் நிவாரண பொருட்கள் எதுவும் வரவில்லை. இதனால் உணவுக்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உணவு கிடைக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தொற்று நோய் பாதிப்புகளும் தீவிரமடைந்துள்ளன.

மறுபுறம் இந்த போரை எதிர்த்தும், போரில் இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்காவின் நிலைப்பாட்டை எதிர்த்தும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் சூடுபிடித்துள்ளன. அமெரிக்காவில் மட்டும் 50க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராடும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை அந்நாட்டு காவல்துறை கைது செய்து வருகிறது. தற்போது வரை 900க்கும் அதிகமானோர் கைதாகியுள்ளனர்.

மாணவர் போராட்டம் லண்டன், பாரிஸ் என ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. சூழல் இப்படி இருக்கையில் 'சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால்' (ICC) போர் குற்றத்திற்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விரைவில் கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படி இருக்கையில் எகிப்துக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே இருக்கும் எல்லை பகுதியான ராஃபாவில் லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். காசா உள்ளே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால், பாலஸ்தீன மக்கள் ராஃபா நோக்கிதான் நகர்ந்தனர். இந்த பகுதியில் இஸ்ரேல் தாக்குதலை தற்போது தொடங்கியுள்ளது.

இங்கு மொத்தம் 10-15 லட்சம் பாலஸ்தீன மக்கள் இருக்கிறார்கள். இவர்கள் இங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் வலியுறுத்தி வருகிறது. ஆனால் தற்போது வரை வெறும் 3 லட்சம் பேர் மட்டுமே வெளியேறியுள்ளனர். ஆனால் இதைப்பற்றியெல்லாம் கண்டுக்கொள்ளாமல், இஸ்ரேல் போரை தீவிரப்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+