வேவு பார்த்த இஸ்ரேல்.. டிரோன் பக்கத்தில் வந்ததும் அதிர்ந்துபோன ஹமாஸ் தலைவர் சின்வார்! வெளியான வீடியோ
டெல் அவிவ்: காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் படைத் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார். இதை இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கிடையே சின்வார் கொல்லப்படுவதற்கு சில நொடிகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. அது இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
கடந்த ஓராண்டுக்கு மேலாகவே இஸ்ரேல் ஹமாஸ் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது. கடந்தாண்டு அக். 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய கொடூர தாக்குதலே இதற்கு முக்கிய காரணமாகும்.

அந்தத் தாக்குதலுக்கு பிறகே ஹமாஸ் மீது முழு வீச்சில் போரை இஸ்ரேல் அறிவித்தது. காசாவில் சரமாரியாகத் தாக்குதல் நடத்திய இஸ்ரேல், அங்கிருந்த ஹமாஸ் படையைக் குறிவைத்துக் கொன்று வருகிறது.
இஸ்ரேல் தாக்குதல்: இரு தரப்பிற்கும் இடையே சமாதானம் செய்யும் முயற்சிகள் எதுவும் ஒர்க் அவுட் ஆகாத நிலையில், இஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடர்ந்தது. குறிப்பாகக் கடந்த சில வாரங்களில் இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. அங்குள்ள பல ஹமாஸ் தலைவர்கள் கொல்லப்பட்டனர். ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூன் மாதம் கொல்லப்பட்டார். தொடர்ந்து பலர் கொல்லப்பட்டனர்.
இந்தச் சூழலில் தான் அடுத்து ஹமாஸ் படைத் தலைவர் யஹ்யா சின்வாரை டார்கெட் செய்தது இஸ்ரேல்.. தீவிர தேடுதல் வேட்டையை நடத்திய இஸ்ரேல், இறுதியாக சின்வாரை நேற்று கொன்றது. அதாவது நேற்று ஒரு கட்டிடத்தில் பதுங்கி இருந்த ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேல் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதற்கு இஸ்ரேல் பதிலடியாக ஏவுகணை தாக்குதலை நடத்தி இருக்கிறது.
டிரோன் வீடியோ: இஸ்ரேல் ராணுவம் டிரோன் அனுப்பிக் கண்காணித்த போது அங்கு ஒருவர் பதுங்கி இருந்தது தெரிய வந்த நிலையில், அவரும் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்த போது அவர் ஹமாஸ் தலைவர் சின்வாரை போல இருந்தது. இதையடுத்து அவரது ஆள்காட்டி விரலைக் கட் செய்து இஸ்ரேல் ராணுவம் டிஎன்ஏ சோதனை செய்ததில், கொல்லப்பட்டது சின்வார் தான் என்பது உறுதியானது. அதைத் தொடர்ந்தே இஸ்ரேல் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதற்கிடையே கொல்லப்படுவதற்கு சில நொடிகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட டிரோன் வீடியோவை இஸ்ரேல் ராணுவம் இப்போது வெளியிட்டுள்ளது. சிதிலமடைந்து இருக்கும் கட்டிடத்திற்குள் அந்த டிரோன் செல்கிறது. அதில் சுற்றிச் சேதமடைந்த இடிபாடுகளுக்கு நடுவே ஒரு சோபாவில் சின்வார் அமர்ந்து இருக்கிறார். அவர் மிகவும் சோர்வாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது
சின்வார்: டிரோன் தனது அருகே வருவதைப் பார்த்த சின்வார், சில நொடிகள் அப்படியே இருக்கிறார். பிறகு ஏதோ ஒரு பொருளை எடுத்து டிரோன் மீது வீசுகிறார். அந்த வீடியோவில் பார்க்கும் போதே சின்வார் வலது கையில் மோசமான காயம் இருப்பதும் ரத்தப் போக்கைத் தடுக்க காயத்தை ஒரு துணியால் சுத்தியுள்ளதும் தெளிவாகத் தெரிகிறது.
அதேநேரம் ட்ரோன் மூலம் கண்காணித்த போதே சின்வாரை அடையாளம் காணவில்லையாம். முதலில் அவர் ஹமாஸ் வீரர்களில் ஒருவர் என்றே நினைத்து இஸ்ரேல் படை தாக்கியுள்ளது. அதன் பிறகு அருகே சென்று பார்த்த போது தான் அது ஹமாஸ் தலைவர் சின்வார் என்பது தெரிய வந்துள்ளது. இந்தத் தாக்குதல் குறித்த ஷாக்கிங் வீடியோ இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications