அதிபருக்கு நெருக்கமானவர்களை தூக்கிய.. மாஜி இஸ்ரேல் மொசாட் ஏஜென்ட்கள்... அதிரும் ஐரோப்பா!
நிகோசியா: "சுவர் ஒட்டிகளுக்கும் காது உண்டு" என்பது பழைய பழமொழி. ஆனால், "சுவருக்குள் கேமராவும் உண்டு" என்பதை ஐரோப்பியா நாடு ஒன்றின் அரசு அதிகாரிகளுக்கு இஸ்ரேல் புரிய வைத்துள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய அதிரடி ஆபரேஷனில் அதிபருக்கு நெருக்கமான அதிகாரிகளுக்கே ஆப்பு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
ஐரோப்பிய/ மத்திய கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள குட்டி நாடு சைப்ரஸ். சுமார் 13 லட்சம் மக்கள் தொகையை மட்டுமே கொண்ட சைப்ரஸ் நாட்டில் புகுந்து இஸ்ரேலைச் சேர்ந்த ஒரு புலனாய்வு நிறுவனம் அதிரடி ஆபரேஷனை நடத்தியுள்ளது. 'பிளாக் கியூப்' (Black Cube) என்கிற தனியார் உளவு நிறுவனம் நடத்திய இந்த ஆய்வில் சைப்ரஸ் அதிபரின் நெருக்கமான அதிகாரிகளுக்கே ஆப்பு வைத்திருக்கிறார்கள்.

என்ன நடந்தது
இந்தச் சம்பவம் தான் இப்போது சர்வதேச அரசியலில் ஹாட் டாபிக்காக உள்ளது. சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடுலைடிஸின் (Nikos Christodoulides) மூத்த உதவியாளர் ஒருவர், கடந்த ஜனவரி மாதம் திடீரென ராஜினாமா செய்தார். காரணம், இணையத்தில் வெளியான அந்த 8 நிமிட வீடியோ! ஸ்டிங் ஆபரேஷனில் அவர் மாட்டிக் கொண்டார். அந்த வீடியோவில், அரசுத் திட்டங்களில் முதலீடு செய்வது குறித்தும், அதிபரை நேரடியாகச் சந்திப்பது குறித்தும் ரகசியப் பேச்சுகள் இடம்பெற்றன.
யார் இந்த பிளாக் கியூப்?
இஸ்ரேலின் உளவு அமைப்பான 'மொசாட்'டில் பணியாற்றிய முன்னாள் அதிகாரிகளால் தொடங்கப்பட்ட நிறுவனம் தான் இந்த பிளாக் கியூப். இந்த வீடியோவை எடுத்து வெளியிட்டது தாங்கள் தான் என்பதை ஒப்புக்கொள்ளும் பிளாக் கியூப், "நாங்கள் சைப்ரஸில் நிலவும் ஊழலை அம்பலப்படுத்தவே இந்த ஆபரேஷனை செய்தோம்; இதற்காகப் பெருமைப்படுகிறோம்" என அவர்கள் அறிக்கை வேறு வெளியிட்டுள்ளனர். அதேநேரம் பிளாக் கியூப் நிறுவனத்திற்கு இந்தப் பணியைக் கொடுத்தது யார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.
மொசாட்
இஸ்ரேல் எப்போதும் தனது உளவு அமைப்புக்குப் பெயர்போனது. இந்த பிளாக் கியூப் நிறுவனத்தை ஆரம்பித்தவர் கூட இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ உளவு அமைப்பான மொசாட் (Mossad)ல் வேலை செய்தவர் தான். "உலகிலேயே மிகவும் ஆபத்தான மற்றும் துல்லியமான உளவு அமைப்பு எது?" என்று கேட்டால், விவரம் தெரிந்த அனைவருமே இந்த மொசாட்டை தான் சொல்வார்கள்.
இஸ்ரேலைச் சுற்றி எப்போதும் எதிரி நாடுகள் இருப்பதால், அந்த நாட்டின் பாதுகாப்புக்கு மொசாட் தான் கண்கள் மற்றும் காதுகள். "யார் எங்கே தப்பு செய்தாலும், அவர்கள் வீட்டு வரவேற்பறைக்கே வந்து தண்டிப்பார்கள்" என்பதுதான் மொசாட்டின் இமேஜ். அவர்களின் அதிரடி மற்றும் துல்லியமான ஆபரேஷன்களுக்கு பல உதாரணங்கள் உள்ளன. அதில் சில தாக்குதல்கள் குறித்து நாம் பார்க்கலாம்!
அதிரடி ஆபரேஷன்கள்
ஆபரேஷன் பினாலே (Eichmann).. இரண்டாம் உலகப் போரில் யூதர்களைக் கொன்ற நாஜி குற்றவாளி அடோல்ஃப் ஐக்மனை, அர்ஜெண்டினாவில் பதுங்கியிருந்தபோது கடத்தி வந்து இஸ்ரேலில் தூக்கிலிட்டது. அடுத்து ஆபரேஷன் என்டேபே (Entebbe)இல் உகாண்டா நாட்டு விமான நிலையத்தில் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்களை, அதிரடியாகப் புகுந்து மீட்டது.. அடுத்து முக்கியமானது Wrath of God.. 1972 மியூனிக் ஒலிம்பிக்கில் இஸ்ரேல் வீரர்களைக் கொன்ற 'பிளாக் செப்டம்பர்' தீவிரவாதிகளை, உலகின் எந்த மூலையில் ஒளிந்திருந்தாலும் தேடித் தேடிப் போட்டுத் தள்ளியது. இப்படி துல்லியமான உளவாளிகளாக இருப்பதாலேயே இஸ்ரேல் டாப் இடத்தில் இருக்கிறது.
-
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications