அச்சுறுத்தும் ஹமாஸ் தீவிரவாதிகள்.. விமானப்படை தளத்தை விட்டு ஓடும் இஸ்ரேல் படை.. வெளியான வீடியோ
இஸ்ரேல்: இஸ்ரேலில் ஆயிரக்கணக்கான ஹமாஸ் படையினர் ஊடுருவியுள்ள நிலையில், காசா அருகே உள்ள தனது விமானப்படை தளத்தை விட்டு இஸ்ரேல் படை ஓட தொடங்கி உள்ளது. இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் நடுவில் உள்ள பகுதிதான் காசா. இதை இஸ்ரேல் கைப்பற்ற முயன்று வருகிறது. ஆனால், பாலஸ்தீனத்தின் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பு இங்கு சுயாட்சியை நடத்தி வருகிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் தீவிரவாத அமைப்பாக முத்திரை குத்தியிருக்கிறது. எனவே கடந்த காலங்களில் இதற்கு எதிரான தாக்குதல்களை தீவிரமாக நடத்தியிருக்கிறது. ஹமாஸ் அமைப்பு மட்டுமல்லாது பாலஸ்தீனத்தில் தோன்றிய பல்வேறு ஆயுத இயக்கங்கள் மீது இஸ்ரேல், மேற்கு நாடுகளின் உதவியுடன் தாக்குதல்களை தொடுத்திருக்கிறது. ஆனால் ஹமாஸை மட்டும் இன்னும் இஸ்ரேலால் முழுமையாக அழிக்க முடியவில்லை.

இருப்பினும் தொடர்ந்து அவ்வப்போது ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்குதலை தொடுத்து வந்திருக்கிறது. இந்த பின்னணியில்தான் இன்று காலை ஹமாஸ், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஒரே நேரத்தில் சுமார் 5000க்கும் அதிகமான ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கியதால் அந்நாடு தற்போது நிலைகுலைந்திருக்கிறது. மட்டுமல்லாது இந்த தாக்குதலின் போது எழுந்த கரும்புகையை பயன்படுத்திக்கொண்டு ஹமாஸ் படையினர் பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் நுழைந்திருக்கின்றனர். மற்றொரு புறம் ஜீப் மூலம் இஸ்ரேலின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு நுழைந்திருக்கின்றனர்.
இப்படி நுழைந்தவர்கள் நடத்திய தாக்குதலில் இதுவரை 40 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 750 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல 53 இஸ்ரேலியர்களை பிணை கைதிகளாக பிடித்து சென்றிருக்கின்றனர். அதில் இஸ்ரேலிய சிறப்பு படையின் எதிரிகளை 'ஆழ ஊடுருவும் படை' பிரிவின் கட்டளைத் தளபதியான 'நிர்மோத் அலோனியும்' ஒருவர். இதுதான் தற்போது இஸ்ரேலை கலங்கடிக்க செய்திருக்கிறது. ஏனெினல் இந்த அலோனி காசாவின் கட்டுப்பாட்டு படைப்பகுதித் தலைவராகவும் சில காலம் பணியாற்றியிருக்கிறார். மட்டுமல்லாது இஸ்ரேல் பாதுகாப்பு படைக்கு இவர் முக்கியமான நபராவார்.

தொடக்கத்தில் நடந்த ஏவுகணை தாக்குதல், அதன் பின்னர் பாரசூட் மூலமாகவும், தரை வழியாகவும் ஊடுறுவியது, இறுதியாக முக்கிய புள்ளியை பிணை கைதியாக பிடித்து வைத்திருப்பது என அடுத்தடுத்த தாக்குதலால் இஸ்ரேல் நிலை குலைந்து போயிருக்கிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக மேற்கு நாடுகள் குரல் கொடுத்து வரும் நிலையில், அந்நாட்டின் பாதுகாப்புப்படையினரும் காசாவில் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த எதிர் தாக்குலை ஹமாஸ் படையினைர் ஏற்கெனவே கணித்ததுதான்.
Israeli Defence forces are now evacuating Air Bases near Gaza as thousands of terrorists flood into Israel.
— Ashlea Simon (@AshleaSimonBF) October 7, 2023
This situation is just escalating.#Israel #Hamas #Palestine #Palestinian #IronDome #Gaza #TelAviv
pic.twitter.com/mcI9WyWSt8
எனவே இதற்கு ஏற்றார்போல் அவர்கள் இஸ்ரேலின் தாக்குதலை எதிர்த்து பதில் தாக்குதலை தொடுத்து வருகின்றனர். சர்வதேச அரசியல் விமர்சகர்கள், ஹமாஸ் படையினர் இந்த முறை பலமாக இருப்பதாக கூறியுள்ளனர். இவர்களின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் தற்போது காசா அருகே உள்ள தங்களது விமானப்படை தளத்தை இஸ்ரேல் காலி செய்ய தொடங்கியுள்ளது. ஏவுகணை தாக்குதல் அச்சம் இருப்பதால், விமானப்படை தளத்தில் இருக்கும் போர் விமானங்களை டிரக்கில் வைத்து சாலை மார்க்கமாக வேறு இடத்திற்கு மாற்றி வருகிறது. இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சோஷியல் மீடியாவில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
-
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
"ஜாம்பி" கப்பல்.. ஹார்முஸை கடந்து சென்ற மர்மம்.. நடுவில் சம்பந்தமே இல்லாமல் சிக்கும் இந்தியா? -
இஸ்ரேலை கதறவிட்ட ஈரான்.. அணு சக்தி மையத்தை குறிவைத்து கடும் ‘அட்டாக்’.. பதிலுக்கு பதிலால் பதற்றம் -
"ஹார்முஸை கடக்க ரூ.18 கோடி.." கப்பல்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்த ஈரான்! பயங்கர பிளான் -
போச்சு.. ஈரானின் ஈரலை அறுத்த அமெரிக்கா! நடன்ஸ் அணுமையம் மீது இஸ்ரேல் அட்டாக்! நெருங்கும் கிளைமேக்ஸ்? -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications