காஸாவில் பதற்றம்.... இஸ்ரேல் துப்பாக்கிச் சூட்டில் 7 அப்பாவி பாலஸ்தீனர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
காஸா: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 அப்பாவி பாலஸ்தீனர்கள் பலியாகி உள்ளனர். அங்கு இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் தொடந்து வருகிறது.
பாலஸ்தீனத்தின் மேற்கு கரை மற்றும் ஜெருசலேம் பகுதிகளில் கடந்த வாரம் ஆங்காங்கே இஸ்ரேல் நாட்டவருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே சிறு சிறு மோதல்கள் வெடித்திருந்தன.

இதன் உச்சகட்டமாக கடந்த வெள்ளியன்று காஸாவில் 200க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு இஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது இஸ்ரேலிய படையினருடன் மோதல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 அப்பாவி பாலஸ்தீனர்கள் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இதனால் காஸா பகுதியில் பதற்றம் தொடர்கிறது.












Click it and Unblock the Notifications