டிரம்ப் தலைமையிலான போர் நிறுத்தம் இப்படித்தான் இருக்கும்! காசா மீது தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்!
காசா: காசாவில் உள்ள பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை டிரம்ப் தலையிட்டு நிறுத்தியிருந்தார். உலகின் மிகக் கொடிய போரை முடிவுக்கு கொண்டு வந்ததாகவும் அவர் பந்தா காட்டிக்கொண்டார். ஆனால் தற்போது காசா மீது இஸ்ரேல் மீண்டும் போரை தொடங்கியிருக்கிறது.
இந்த தாக்குதல் போர் நிறுத்தம் குறித்த நம்பிக்கையை இழக்க செய்திருக்கிறது. தாக்குதல் விவகாரத்தில் இஸ்ரேலும், பாலஸ்தீன ஹமாஸ் குழுவும் பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளன.

கடந்த அக்டோபர் 11 அன்று அமெரிக்காவின் தலையீட்டால் இஸ்ரேல்-காசா இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. இந்நிலையில் காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள், தெற்கு ரஃபாவில் துப்பாக்கிச் சூடு சத்தங்களைக் கேட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர். அதேபோல, கான் யூனிஸுக்கு அருகிலுள்ள கிழக்கு அபாசான் நகரிலும் இஸ்ரேலிய டாங்கிகளிலிருந்து கடுமையான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறியுள்ளனர். கான் யூனிஸில் வசிப்பவர்கள், அக்டோபர் 19 மதியம் ரஃபாவில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதல்களை நேரில் பார்த்திருக்கின்றனர்.
இத்தாக்குதல்கள் குறித்து சர்வதேச ஊடகங்கள் இஸ்ரேலிய அரசிடம் கேள்வியை எழுப்பியுள்ளன. இஸ்ரேலிய அரசாங்க செய்தித் தொடர்பாளர், இராணுவத்தை அணுகுமாறு தெரிவித்தார். ஆனால், இராணுவம் உடனடியாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. வடக்கு காசாவில் நடந்த வான்வழித் தாக்குதலில், வடக்கு காசாவின் கிழக்கு ஜபாலியா பகுதியில் இரண்டு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசா உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு இஸ்ரேல் 47 முறை அத்துமீறல் செய்திருக்கிறது. இதன் விளைவாக 38 பேர் இறந்துள்ளதாகவும், 143 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசா அரசு தெரிவித்திருக்கிறது. "இந்த மீறல்கள் பொதுமக்களை நேரடியாக சுடுவது, வேண்டுமென்றே குண்டு வீசுவது, இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவது, அத்துடன் பல பொதுமக்களை கைது செய்வது எனப் பலவற்றை உள்ளடக்கியது" என்று காசா தெரிவித்திருக்கிறது.
-
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
73 ஏவுகணை தாக்குதல்.. 656 ட்ரோன்.. சைரன் சத்தம்.. பெண்கள், குழந்தை கதறல்.. உக்ரைனை துவம்சம் செய்த ரஷ்யா! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications