சுரங்கத்திற்குள் தனி உலகம்.. பெட் ரூம், ஏகே 47.. ஹிஸ்புல்லா பதுங்கிடம்.. வீடியோ வெளியிட்ட இஸ்ரேல்
டெல் அவிவ்: தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய சுரங்கத்திற்குள் சொகுசு படுக்கைகள், ஏகே 47 துப்பாக்கிகள், இரு சக்கர வாகனங்கள், சாப்பிடும் அறை, ஜெனரெட்டர்கள் உள்ளிட்டவை இருப்பதாக இஸ்ரேல் வீடியோ வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. காசா மீது இஸ்ரேல் படைகள் மும்முனை தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால், அங்கு ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிர்களையும் உடமைகளையும் இழந்துள்ளனர். ஹமாஸ் அமைப்புக்கு எதிராக தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் மீது லெபனானில் உள்ள ஈரானிய ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லாவும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால், லெபனான் மீதும் இஸ்ரேல் பதிலடி தாக்குதல் தொடுத்து வருகிறது. லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரின் கட்டமைப்புகளை குறிவைத்து வான்வெளி தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா முதல் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டொர் உயிரிழந்துள்ள்னர். ஹிஸ்புல்லா நடத்திய பதிலடி தாக்குதலில் அண்மையில், 4 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து இஸ்ரேல், ஹிஸ்புல்லா மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இஸ்ரேலை ஒட்டியுள்ள லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் சுரங்கத்தை கண்டுபிடித்த இஸ்ரேல் ராணுவ வீரர்கள், அதில் உள்ள கிடந்த ஏகே 47 ரைபிள்ஸ், பைக்குகள் உள்ளிட்டவறறை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.
ஒரு நிமிடம் மட்டுமே ஓட கூடிய இந்த வீடியோவில், ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்த சுரங்க அறை (பங்கர்)க்கு உள்ளே சொகுசு படுக்கைகள், இரு சக்கர வாகனங்கள், ஜெனரேட்டர்கள், தண்ணீர் வசதி, சாப்பிடும் பகுதி என குட்டி உலகம் என்று சொல்லும் அளவுக்கு சகல வசதிகளுடன் அங்கு ஹிஸ்புல்லாக்கள் பதுங்கியிருந்தததும், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அதில் இருந்ததாகவும் இஸ்ரேல் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கத்தை விட முற்றிலும் இது மாற்பட்டதாக உள்ளதாகவும் இரும்பு கதவுகளுடன் இந்த பங்கர்களை ஹிஸ்புல்லாக்கள் அமைத்து இருப்பதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பல ஆண்டுகளாக இந்த சுரங்கத்தை ஹிஸ்புல்லாக்கள் கட்டமைத்துள்ளதாகவும் இஸ்ரேல் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் இந்த சுரங்கத்தை ஹிஸ்புல்லாக்கள் அமைத்து இருப்பதாகவும் இஸ்ரேல் தரப்பில் சொல்லப்படுகிறது.
100 மீட்டர் நீளம் கொண்டதாக உள்ள சுரங்கத்திற்குள் வாரக்கணக்கில் தங்கியிருக்கும் அளவுக்கு வசதிகள் உள்ளதாகவும், இஸ்ரேலிய ராணுவ வீராங்கனை ஒருவர் கூறும் வீடியோ வெளியாகியுள்ளது. எனினும், இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.












Click it and Unblock the Notifications