நெஞ்சே பதறுதே.. வயிறு கிழிந்து இறந்த இஸ்ரேல் பெண்.. வெளியே தெரிந்த குழந்தை! ஹமாஸ் தாக்குதலின் கோரம்
இஸ்ரேல்: இஸ்ரேல் மீது திடீரென்று ஹமாஸ் படை நடத்திய தாக்குதலில் கர்ப்பிணி வயிறு கிழிந்து இறந்தார். மேலும் அவரது வயிற்றில் இருந்த குழந்தை வெளியே தெரிந்த சம்பவம் நெஞ்சை பதறவைத்துள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கு இடையே இன்று 7வது நாளாக யுத்தம் நடக்கிறது. கடந்த சனிக்கிழமை தொடங்கிய மோதல் நாள்தோறும் தீவிரமாகி வருகிறது.

ஹமாசின் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் வான்வெளி தாக்குதலை இஸ்ரேல் தீவிரமாக நடத்தி வருகிறது. இதனால் அங்குள்ள கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.
தற்போது வரை இருதரப்புக்கும் இடையே நடந்த மோதலில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இதில் இஸ்ரேலை சேர்ந்த 1400 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் தற்போது போர் தொடங்கி உள்ளதாக கூறி காசாவை முற்றுகையிட்டு தாக்குதலை தொடங்கி உள்ளது.
தற்போது வரை வான்வெளி தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் விரைவில் காசா நகருக்குள் நுழைந்து தரைவழி தாக்குதல் நடத்த உள்ளது. இந்த சமயத்தில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் படைகள் இடையே துப்பாக்கிச்சண்டை நடக்கும். இதனால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் காசா பகுதி மக்கள் எகிப்து நோக்கி தஞ்சமடைந்துள்ளனர். சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.
இந்நிலையில் தான் ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென்று நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் ஏராளமானவர்கள் இறந்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் பலியாகினர். இதற்கிடையே தான் ஹமாஸ் தாக்குதலில் இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியை யோசி லாண்டாவ் மேற்கொண்டுள்ளார். இவர் இயற்கைக்கு மாறாக மரணம் அடைந்தவர்களின் உடல்களை மீட்கும் ஜகா எனும் தன்னார்வ தொண்டு அமைப்பின் கீழ் கடந்த 33 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார்.
பல ஆண்டுகளாக உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு வரும் நிலையில் தற்போதைய தாக்குதலிலும் பலியானவர்களின் உடல்களை அவர் மீட்டு அப்புறப்படுத்தி வருகிறார். இந்த வேளையில் அவர் கண்ட காட்சிகள் நடுங்க வைத்துள்ளன. இதுதொடர்பாக அவர் கூறிய தகவல் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் கூறியதாவது: ‛‛தெருவில் மக்கள் இறந்து கிடப்பதை நான் பார்த்தேன். பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேல் படைகளுக்கு இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதுபோன்ற சண்டையை நான் பார்த்தது இல்லை.
மேலும் தாக்குதலுக்கு பயந்து ஒவ்வொருவரும் கார்களில் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. 15 நிமிடங்களில் மேற்கொள்ள வேண்டிய பயணத்துக்கு 11 மணிநேரம் வரை ஆனது. இருப்பினும் நாங்கள் உடல்களை மீட்டு பையில் வைத்தோம். பீரி பகுதியில் நாங்கள் ஒரு வீட்டுக்குள் நுழைந்தபோது அங்கு ஒரு பெண் இறந்து கிடந்தார். அவரது வயிறு கிழிந்து, வயிற்றுக்குள் இருந்த குழந்தை வெளியே தெரிந்தது. இது அனைவரின் இதயத்தையும் நொறுக்கியது.
குழந்தைகள் உள்பட 20க்கும் அதிகமானவர்களின் கைகள் பின்னால் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட காட்சியை நான் கண்டேன். சிலர் பாலியல் ரீதியான தொல்லைகளை அனுபவித்து இருக்கலாம். தனித்து விடப்பட்ட கார்கள், எரிந்த நிலையில் இருந்த கார்கள் உள்ளிட்டவை குப்பையாக சாலையோரம் குவிந்துள்ளன'' என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications