இஸ்ரேலுக்கு அடுத்த ஷாக்.. கூட்டமாக வெளியேறும் ஐடி நிறுவனங்கள்? இந்தியாவுக்கு ‛ஜாக்பாட்’.. எப்படி?

Subscribe to Oneindia Tamil

இஸ்ரேல்: பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு-இஸ்ரேல் இடையே போர் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் இஸ்ரேலில் செயல்பட்டு வரும் கூகுள், மைக்ரோசாப்ட், டிசிஎஸ், விப்ரோ, எச்சிஎல், இன்போசிஸ் உள்பட பல முன்னணி ஐடி நிறுவனங்கள் அங்கிருந்து இடம்பெயர வாய்ப்புள்ளதாகவும், அவர்கள் இந்தியாவை நோக்கி படையெடுக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக பிரச்சனை இருந்து வருகிறது. தற்போது காசா பாலஸ்தீனத்தின் ஒருபகுதியாக இருக்கும் நிலையில் இதற்கு முன்பு அது இஸ்ரேல் வசம் இருந்தது. இதனால் காசா பகுதி யாருக்கு என்பதில் தான் இஸ்ரேல் மற்றும் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பு இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

IT companies in Israel may shift to India due to ongoing conflict with Hamas

அவ்வப்போது இருதரப்பும் மோதிக்கொள்வது உண்டு. இந்த வேளையில் ஏவுகணை தாக்குதல் நடந்து மக்கள் பலியாகி உள்ளனர். ஆனால் கடந்த சனிக்கிழமை திடீரென்று இந்த மோதல் தீவிரமானது. அன்றைய தினம் அதிகாலையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பு 7 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி தாக்கியது.

அதோடு வாகனம் மற்றும் பாராகிளைடரில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் ஊடுருவி பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இந்த தாக்குதலில் இஸ்ரேல் உண்மையில் அதிர்ச்சியடைந்து போனது. அதோடு கோபத்தின் உச்சிக்கு சென்ற இஸ்ரேல், போர் தொடங்கி உள்ளதாக அறிவித்தது. தங்கள் நாட்டுக்குள் நுழைந்த ஹமாஸ் படையினரை அவர்கள் சுட்டு கொன்றனர். அதோடு காசாவில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருக்கும் இடத்தில் வான்வெளி தாக்குதல் நடத்தினர்.

இந்த யுத்தம் என்பது இன்று 7 வது நாளாக தொடர்கிறது. தற்போது காசாவின் எல்லைப்பகுதியை இஸ்ரேல் படையினர் முற்றுகையிட்டுள்ளனர். விரைவில் தரைவழி தாக்குதல் நடத்த உள்ளனர். இதனால் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான யுத்தம் இன்னும் தீவிரமாகலாம். இந்நிலையில் தான் இஸ்ரேலுக்கு இன்னொரு அதிர்ச்சி வைத்தியம் ரெடியாகி உள்ளது.

IT companies in Israel may shift to India due to ongoing conflict with Hamas

அதாவது தொடர்ந்து போர் நடக்கும் பட்சத்தில் இஸ்ரேலில் உள்ள ஐடி நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. போருக்கு நடுவே இஸ்ரேலில் ஐடி நிறுவனங்களை நடத்துவது பணிக்கு இடையூறு என்பதோடு, பாதுகாப்பாற்றதாகவும் இருக்கும் என்பதால் இந்த முடிவை ஐடி நிறுவனங்கள் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைய சூழலில் இஸ்ரேலில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளன. மைக்ரோசாப்ட், இன்டெல், கூகுள் உள்பட இந்தியாவின் எச்சிஎல், விப்ரோ, இன்போசிஸ், டிசிஎஸ் உள்பட 500க்கும் அதிகமான உலகளாவிய ஐடி நிறுவனங்கள் இஸ்ரேலில் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் குறைந்தபட்சமாக 10 லட்சம் பேர் வரை பணியாற்றி வருகின்றனர். போருக்கு நடுவே இவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது என்பது பெரும் சவாலாக இருக்கும்.

இதனால் இஸ்ரேல் -ஹமாஸ் இடையே போர் தீவிரமாக தொடரும் பட்சத்தில் இந்த ஐடி நிறுவனங்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ஒவ்வொரு நிறுவனங்களும் இஸ்ரேலை போன்ற நேரச்சூழல் மற்றும் திறமையான இளைஞர்கள் இருக்கும் நாடுகளுக்கு இடம்பெயர திட்டமிட்டுள்ளன. அதன்படி இஸ்ரேலை விட்டு வெளியேறும் நிறுவனங்கள் இந்தியாவில் தங்களின் நிறுவனங்களை அமைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதோடு இந்தியா மட்டுமின்றி மத்திய கிழக்கு நாடுகள், கிழக்கு ஐரோப்பியா நாடுகளை நோக்கி சில நிறுவனங்கள் இடம்பெயரலாம் எனவும் தகவல்கள் கசிந்துள்ளன.

IT companies in Israel may shift to India due to ongoing conflict with Hamas

இஸ்ரேல் பல நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் உலகில் முன்னிலையில் உள்ளது. இதற்கு அந்த நாட்டில் உள்ள ஐடி நிறுவனங்களும் முக்கிய காரணமாகும். இத்தகைய சூழலில் தான் ஹமாஸ் உடனான போரால் இஸ்ரேலில் இருந்து ஐடி நிறுவனங்கள் வெளியேறினால் அது உண்மையிலேயே அந்த நாட்டுக்கு பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தும். அதோடு பொருளாதார வளர்ச்சியிலும் சரிவை ஏற்படுத்தலாம். இதனால் ஐடி நிறுவனங்களின் இந்த முடிவு என்பது இஸ்ரேலுக்கு கடும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+