ஸ்மார்ட்போன் சார்ஜர், வானிலை அறிவிப்பு, பயோமெட்ரிக்குடன் கூடிய சூட்கேஸ் வந்துடுச்சு!
பாரீஸ்: உங்கள் செல்போனை சார்ஜ் செய்து கொடுத்து, கைரேகையை வைத்து திறக்கும் அதிநவீன ஸ்மார்ட் சூட்கேஸை பிரான்ஸைச் சேர்ந்த டெல்சி நிறுவனம் தயாரித்துள்ளது.
பிரான்ஸைச் சேர்ந்த டெல்சி நிறுவனம் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் சூட்கேஸை தயாரித்துள்ளது. ப்ரோட்டோடைப் மாடலான அந்த சுட்கேஸுக்கு பிளக்கேஜ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
பார்க்க சாதாரணமாகத் தெரியும் அந்த பிளக்கேஜால் பல நன்மைகள் உள்ளது. அதன் விவரம்,

ஸ்மார்ட்போன் சார்ஜர்
பயணம் செய்கையில் செல்போன்களை சார்ஜ் போடுவது கடினமாக உள்ளது. இந்நிலையில் பிளக்கேஜில் ஸ்மார்ட் போன்களை சார்ஜ் செய்யும் வகையில் சார்ஜர் உள்ளது. பிளக்கேஜை கைரேகையை வைத்து திறக்கும் வசதி உள்ளது.

விமானம்
விமானத்தில் பிளக்கேஜை ஏற்றியாகிவிட்டதா இல்லையா என்ற தகவல் அளிப்பது, அதை ஏற்றுகையில் அது திறந்துகொள்ளாமல் இருந்ததா என அது தனது உரிமையாளருக்கு தகவல் கொடுக்கும். இதன் மூலம் பிளக்கேஜை விமானத்தில் ஏற்றியாகிவிட்டதா இல்லையா என்று கவலைப்படத் தேவையில்லை. இந்த தகவலை அளிக்க பிளக்கேஜில் ஒரு அப்ளிகேஷன் உள்ளது.

மேலும்
பிளக்கேஜ் விமான தகவல்கள், உரிமையாளர் செல்லும் இடத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள், வானிலை அறிவிப்பு உள்ளிட்ட தகவல்களையும் அளிக்கும்.

எடை
பிளக்கேஜுடன் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனை இணைத்தால் அதில் எத்தனை கிலோ எடை கொண்ட பொருட்கள் உள்ளது என்பதை தெரிவிக்கும். கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பிளக்கேஜை மேம்படுத்த புதிய ஐடியாக்கள் அளிக்குமாறு அந்நிறுவனம் மக்களிடம் கேட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications