அமெரிக்க விசா மசோதா எதிரொலி.. இந்திய ஐடி நிறுவன பங்குகள் கடும் வீழ்ச்சி! எந்த நிறுவனமும் தப்பவில்லை
வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய விசா நடைமுறை மசோதாவால் இந்திய ஐடி நிறுவனங்களின் பங்குகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
'உயர் திறமை ஒருங்கிணைப்பு மற்றும் நேர்மை சட்டம் 2017' என்ற பெயரிலான விசா சட்ட மசோதாவை கலிபோர்னியாவை சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினரான ஜூ லொப்க்ரென் இந்த மசோதாவை இன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் மறு அறிமுகம் செய்தார்.
இந்த மசோதாபடி, இனிமேல் வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு தொழில் நிமிர்த்தமாக வரும் பணியாளர்கள் ஹெச்-1பி விசா பெற வேண்டுமானால், அந்த ஊழியருக்கு அமெரிக்க டாலர் மதிப்பில் 130,000 டாலருக்கு மேல் சம்பளம் வழங்கப்பட வேண்டும்.

ஐடி நிறுவனங்களுக்கு செக்
இப்போதுள்ள நடைமுறைப்படி இந்த ஊதியம் 60,000 அமெரிக்க டாலராக உள்ளது. புதிய ஹெச்-1பி விசா சட்ட மசோதாவால் அதை பெற வேண்டுமானால், அந்த ஊழியர்கள் தற்போதுள்ள ஊதியத்தைவிட இரட்டை மடங்குக்கு மேல் ஊதியம் பெற வேண்டும். இதனால் இந்தியா போன்ற வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை அழைத்துச் செல்லும் செலவு அதிகரிக்கும் என்பதால் ஐ.டி. நிறுவனங்கள் அமெரிக்காவிலுள்ள உள்ளூர் பணியாளர்களையே அந்த பணிக்கு நியமித்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

பங்கு சந்தையில் சரிவு
இந்த மசோதா நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கையுள்ளதால், இச்செய்தி வெளியானதுமே, இந்திய பங்கு சந்தையில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சியடைந்தனர். இன்போசிஸ் நிறுவன பங்குகள் 4.5 சதவீதம் வீழ்ச்சியடைந்தன. இது அந்த நிறுவனத்திற்கு கடந்த 6 மாதங்களில் இல்லாத வீழ்ச்சியாகும்.

டி.சி.எஸ் கடும் வீழ்ச்சி
டி.சி.எஸ் நிறுவனத்தின் பங்குகள் 5.5 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 27 மாதங்களில் அந்த நிறுவன பங்குகள் சந்தித்த மிகப்பெரிய வீழ்ச்சி இது. டெக் மஹிந்திரா நிறுவனத்தின் பங்குகள் 9.7 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளன. 20 மாத காலத்தில் அடைந்த மிகப்பெரிய வீழ்ச்சி இது.

விப்ரோவும் தப்பவில்லை
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவன பங்குகள் 6.3 சதவீதம் வீழ்ச்சியடைந்து, 15 மாத காலத்தின் பெரிய சரிவை சந்தித்துள்ளது. விப்ரோ நிறுவனம் 4.1 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த 9 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி இதுவாகும்.

இந்த நிறுவனங்களுக்கும் அதே கதி
எம்பசிஸ் நிறுவனத்தின் பங்குகள் மற்றும் ஜியோமெட்ரிக் நிறுவனத்தின் பங்குகள் தலா 3.9 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளன. ஹேக்வேர் டெக்னாலஜிஸ் பங்குகள் 3.4 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளன. மைன்ட்ட்ரீ நிறுவன பங்குகள் 3.3 சதவீத வீழ்ச்சியயைும், கேபிஐடி டெக்னாலஜிஸ் நிறுவன பங்குகள் 3.1 சதவீத வீழ்ச்சியையும் சந்தித்துள்ளன.
கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு மும்பை பங்கு சந்தையின் ஐடி குறியீட்டு எண் 4.8 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. சென்செக்சில் இது 0.6 சதவீத வீழ்ச்சியாக இருந்தது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications