பீதியை கிளப்பும் இத்தாலி.. ஒரே நாளில் 32,616 பேருக்கு கொரோனா தொற்று.. இதுவரை 9,35,104 பேர் பாதிப்பு
ஒரே நாளில் இத்தாலியில் 32,616 பேருக்கு கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்
ரோம்: நாளுக்கு நாள் பீதியை கிளப்பும் இத்தாலியில் மேலும் 32,616 பேர் ஒரே நாளில் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.. இது அந்நாட்டு மக்களுக்கு கலக்கத்தை தந்து வருகிறது.
உலக அளவில் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.. அதேபோல, டிஸ்சார்ஜ் ஆகி செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் 2வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இத்தாலியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன... என்றாலும், இத்தாலியில் கடந்த சில தினங்களாக பாதிப்பு மட்டும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது..
நேற்று முன்தினம் இத்தாலியில் மொத்தம் 39,811 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தற்போது 32,616 பேருக்கு தொற்று மேலும் உறுதியாகி உள்ளது.. அதன்படி, இதுவரை இத்தாலியில் மொத்தம் 9,35,104 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 41,394 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.. குறிப்பாக இத்தாலியின் லோம்பார்டி பகுதிதான் தொற்றால் ரொம்ப மோசமாக பாதிப்பட்ட நகரமாக இருக்கிறது.. அங்கு கடந்த சனிக்கிழமை மொத்தம் 11,489 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இப்போதைய நிலவரப்படி 6,318 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல, ரஷ்யாவிலும் தினமும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது... அங்கு நேற்று காலை வரை ஒரே நாளில் 20 ஆயிரத்து 498 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது... இதன் மூலம் ரஷியாவின் மொத்த பாதிப்பு 17 லட்சத்து 74 ஆயிரத்து 334 ஆகி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரத்து 492 பேர் குணமடைந்து உள்ளனர்... 286 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷியாவில், மாஸ்கோவில்தான் அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.. நேற்று ஒரே நாளில் 5,751 பேர் தொற்றால் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications