செத்தும் சம்பாதித்துக் குவிக்கும் ஜாக்சன்... இறந்த பிறகு ரூ. 6500 கோடி வருவாய் குவிப்பு!
லாஸ் ஏஞ்சலெஸ்: செத்தும் கொடுத்தான் என்பது போல இறந்த பிறகும் கூட தொடர்ந்து சம்பாதித்துக் குவிக்கிறார் மறைந்த பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சன்.
இந்த வகையில் மறைந்த மேதைகளான எல்விஸ் பிரஸ்லி மற்றும் சார்லஸ் ஷுல்ஸ் ஆகிய பாப் பாடகர்களை இவர் மிஞ்சியுள்ளார்.
2009ம் ஆண்டு மரணமடைந்த ஜாக்சன் அதற்குப் பின்னர் அவரது படைப்புகளுக்கா ராயல்டி உள்ளிட்டவை மூலமாக ரூ. 6500 கோடி வரை சம்பாதித்துள்ளாராம்.

செத்தும் சம்பாத்தியம்
மரணமடைந்த பிரபலங்கள் வரிசையில் அதிகம் சம்பாதிப்பது மைக்கேல் ஜாக்சன்தான் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் ஜாக்சன் 75 மில்லியன் பவுண்டு சம்பாதித்துள்ளாராம்.

காசு மேல காசு வந்து
கிட்டத்தட்ட 30 வருடம் பாப் உலகில் கோலோச்சிய போது மைக்கேல் ஜாக்சன் மொத்தமாக 7000 கோடி வரை சம்பாதித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரது மறைவுக்குப் பின்னரும் கூட அவரது வருவாய் சிறப்பாகவே உள்ளது. 2009 முதல் இதுவரை கிட்டத்தட்ட 6500 கோடியை அவர் சம்பாதித்துள்ளார்.

நம்பர் ஒன் இவர்தான்
இந்த ஆண்டு மைக்கேல் ஜாக்சன் 75 மில்லியன் பவுண்டுகளைச் சம்பாதித்துள்ளார். இதன் மூலம் மரணமடைந்த பிரபலங்கள் வரிசையில் இவர் முதலிடத்தைப் பிடித்திருப்பதாக போர்ப்ஸ் கூறுகிறது.

2வது இடம் பிரஸ்லிக்கு
2வது இடத்தில் எல்விஸ் பிரஸ்லி உள்ளார். இவரது சம்பாத்தியம் 36 மில்லியன் பவுண்டுகள் ஆகும். கார்ட்டூனிஸ்ட் சார்ல்ஸ் ஷுல்ஸ் 3வது இடத்தில் இருக்கிறார். 4வது இடம் பாப் மார்லிக்குக் கிடைத்துள்ளது.

எலிசபெத் டெய்லர்
மறைந்த ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் 13 மில்லியன் பவுண்டுகளுடன் 5வது இடத்தைப் பிடித்திருக்கிறார்.

குறையாத வருமானம்
ஜாக்சனைப் பொறுத்தவரை அவர் 2009ம் ஆண்டு மறைந்தாலும் கூட வருடா வருடம் அவரது வருமானம் சற்றும் குறையாமல் இருக்கிறதாம். மறைந்தவர்கள் வரிசையில் மட்டுமல்லாமல் உயிருடன் உள்ள கலைஞர்களுக்கும் சரியான போட்டியாக இருக்கிறார் ஜாக்சன்.

செத்தப்போ குவிந்திருந்த கடன்
ஜாக்சன் மரணமடைந்தபோது அவரது பெயரில் 392 மில்லியன் பவுண்டுகள் கடன் இருந்தது என்பது நினைவிருக்கலாம். ஆடம்பர செலவுகள், வாங்கிய கடனுக்கான வட்டி என சேர்ந்து இவ்வளவு பெரி தொகை கடனாக இருந்தது. ஆனால் இன்று ஜாக்சன் இல்லை. வருமானமோ குறையாமல் வந்து கொண்டுள்ளது.
-
நேட்டோவில் இருந்து விலகும் அமெரிக்கா? உலக நாடுகளுக்கே அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்.. இப்படி ஆகிடுச்சே -
வளைகுடாவில் அமெரிக்காவுக்கு இன்னொரு தலைவலி.. ஈராக்கில் சர்வதேச செய்தியாளர் கடத்தல்.. ஷாக் வீடியோ -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம்












Click it and Unblock the Notifications