நவாஸ் ஷெரிப், மகள் மர்யம் விடுதலை.. இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் அவரது மகள் மர்யம் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் அவர்களை விடுதலை செய்வதற்கு உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவை நவாஸ் ஷெரீப் மற்றும் மர்யம் ஆகியோர் எதிர்ப்பு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் நீதிபதிகள் அத்தார் மினால்லா மற்றும் மியான்குல் ஹசன் அவுரங்கசீப் ஆகியோர் கேட்டறிந்தனர்.

இன்று தனது இடைக்கால உத்தரவை நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதில், சிறை தண்டனை பெற்ற நவாஸ் ஷெரிப் அவர் மகள் மர்யம், முன்னாள் ராணுவ கேப்டன் சப்தார் ஆகியோரின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து விடுதலை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தேசிய அக்கவுண்டபிளிட்டி பிரிவு தரப்பில் இன்னும் முழுமையாக வாதம் முன் வைக்கப்படவில்லை. இன்று சில நிமிடங்கள் மட்டுமே, அந்த தரப்பு வழக்கறிஞர் அக்ரம் குரேஷி வாதிட்டார். இதையடுத்து ஷெரீப் வழக்கறிஞர் வாதிட்டார். இருப்பினும் நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் மூன்று முறை பிரதமராக பதவி வகித்தவர் நவாஸ் ஷெரீப். லண்டனின் மிக முக்கியமான பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. பாக். லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இதற்கான நிதி ஆதாரத்தை இவரால் காண்பிக்க முடியவில்லை.
கடந்த ஜூலை மாதம் லஞ்ச ஒழிப்பு நீதி மன்றம் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகள் மர்யம் ஆகியோருக்கு முறையே 10 மற்றும் 7 வருடங்கள் சிறை தண்டனை விதித்தது.
லண்டனில் இருந்த நவாஸ் ஷெரீப் மற்றும் மர்யம் ஆகியோர் பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஜூலை மாதம் பாகிஸ்தானுக்கு திரும்பி கைதுக்கு உள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications