மோதலுக்கு இடையே சீன அமைச்சரை பார்த்ததும் ஜெய்சங்கர் செய்த செயல்.. எஸ்சிஓ மாநாட்டில் சுவாரசியம்
அஸ்தானா: இந்தியாவுக்கும் சீனாவுக்குமான உறவில் தொடர் விரிசல்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இ ஆகியோர் கஜகஸ்தானில் நேரில் சந்தித்து உரையாடியுள்ளனர்.
கடந்த 2020ம் ஆண்டில் இந்தியா-சீன எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு வீரர்களுக்கு இடையிலான மோதல் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த மோதல் சம்பவம் இரு நாட்டின் உறவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இரு நாட்டு ராணுவம் தற்போது பதற்றத்தை தனித்திருக்கிறது. இருப்பினும், ராஜதந்திர உறவில் இந்த பதற்றம் இன்னும் தணியவில்லை.

இதற்கு அமெரிக்காவும் முக்கிய காரணமாக இருக்கிறது. அதாவது இந்தியாவில் இருக்கும், திபெத்திய புத்த மத தலைவர் தலாய் லாமாவை அமெரிக்க நாடாளுமன்றத்தின் சிறப்பு உறுப்பினர்கள் பெலோசி உள்ளிட்டோர் சமீபத்தில் சந்தித்து பேசியிருந்தனர். இப்படி ஒரு சந்திப்பு நிகழும் என்று ஏற்கெனவே சீனாவுக்கு தெரியும். எனவே இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இருப்பினும் இந்த எதிர்ப்பை அமெரிக்கா பொருட்படுத்தவில்லை. இந்தியாவும் கண்டும் காணாமல் இருந்துவிட்டது.
ஏற்கெனவே ராணுவ வீரர்கள் மோதல், டிக்டாக் போன்ற சீன செயலிகளை தடை செய்திருந்தது என சீனாவுக்கு எதிராக இந்தியா எடுத்த நடவடிக்கைகள் காரணமாக இரு நாட்டு உறவில் ஒரு சுமுகமின்மை நீடித்து வருகிறது. இப்படி இருக்கையில் அமெரிக்க அரசியல் தலைவர்கள் தலாய் லாமாவை சந்தித்திருந்தது இந்த சுமுகமின்மையை மேலும் தீவிரமாக்கியுள்ளது.
இந்நிலையில்தான் இன்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இ மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அஸ்தானாவில் சந்தித்துள்ளார். ஏற்கெனவே இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெர்மனியில் இருவரும் சந்தித்து பேசியிருந்தனர். அந்த வகையில் இது இரண்டாவது சந்திப்பாகும். அஸ்தானாவில் தற்போது எஸ்சிஓ மாநாடு நடைபெற்று வருகிறது.
இந்த எஸ்சிஓ அமைப்பில் இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன. ஆண்டுக்கு ஒருமுறை எஸ்சிஓ அமைப்பின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த ஆண்டு கஜகஸ்தானில் இம்மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் ஜெய் சங்கர் பங்கேற்றிருக்கிறார்.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில், மோடியின் ரஷ்ய பயணம் காரணமாக ஜெய்சங்கர் இதில் பங்கேற்றிருக்கிறார். இந்த பங்கேற்பின்போதுதான் சீன வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பு இரு நாட்டு உறவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications