ஆப்ரிக்காவின் மடகாஸ்கரில் ஜல்லிக்கட்டு! தமிழகத்திலிருந்து போனதா?
அன்டனனரிவோ (மடகாஸ்கர்): இந்தியாவிற்கு தென்மேற்கே, மொசாம்பிக் நாட்டிற்கு கிழக்கே, தென் ஆப்பிரிக்காவுக்கு வட கிழக்கே அமைந்துள்ள தீவு நாடான மடகாஸ்கரில், தொன்று தொட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்று வருவது தெரிய வந்துள்ளது.
சவிகா என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த வீர விளையாட்டை , தமிழகத்தைப் போல் விவசாய இளைஞர்கள் ஏறு தழுவுதல் நிகழ்ச்சியை மடகாஸ்கர் கிராமங்களில் நடத்தி வருகின்றனர். தமிழ் மரபு அறக்கட்டளையின் மின் தமிழ் மேடையில் இது குறித்த பதிவு வெளியாகியுள்ளன.
நெல் வயல்களில் பயிரிடத் தொடங்கும் காலத்தில் இந்த விளையாட்டு பிரபலம். மலகாசி என்றழைக்கப்படும் மடகாஸ்கர் மக்கள், பொன் பொருளை விட செபு(Zebu) என்றழைக்கப்படும் மாடுகளை விலையுர்ந்த பொருளாகக் கருதுகிறார்களாம்.

பெண்களைக் கவர்வதற்கான விளையாட்டு மலகாசி மொழியில் மிசாவிகா (misavika) என்றால் பிடித்திருத்தல், ஒரு கையால் பிடித்தல் என்றும் அர்த்தமாம். அதைப் போலவே மாடுகளின் திமிலைப் பிடித்து அடக்குகின்றனர்.
இத்தகைய செபு மாடுகள் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக கிழக்கு அல்லது தென்திசை நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்டிருக்கலாம் என்று, எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மை பொருட்கள் ஆய்வுகள் கூறுகின்றது.
இந்த மாடுகள் இந்தியாவின் ஓங்கோல், பிரம்மன், நெல்லூர் , நெல்லூர், காங்கயம் உள்ளிட்ட 75 காளைகள் செபு இனத்தைச் சார்ந்தவை என கால்நடைகளுக்கான வழிகாட்டி நூல் கூறுகிறது என்று தமிழ் மரபு அறக்கட்டளையின் மின் தமிழ் மேடையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மடகாஸ்கரில் சேவல் சண்டையும் பரவலாக நடத்தப்படுகிறதாம்.

வீடியோ இணைப்பில், வீரர் ஒருவர் இந்த வீர விளையாட்டில் வெற்றி பெறுவதன் மூலம் பெண்களின் மனதில் இடம் பெறுவோம் என்று கூறுவதையும், சப்-டைட்டிலில் கவனிக்கலாம்.
நம்மூர் ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்று, பெண்ணை மணமுடிக்கும் வழக்கம் இருந்ததையும் இது நினைவு படுத்துகிறது.
தமிழகக் காளை வகைகள்
தமிழகத்தில் உள்ள சேனாபதி காங்கயம் கால்நடைஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் கே.எஸ். சிவசேனாபதியிடம் இந்த வீடியோவை காண்பித்து கேட்ட போது, நம்மூர் காங்கயம், புலிகுளம் காளைகளைப் போலவே திமில், கொம்புகளுடன் இருக்கிறது. அவை இங்கிருந்து சென்றவை என்ற ஆராய்ச்சிகள் தெரிவித்தால் அதில் ஆச்சரியமில்லை என்றார். மேலும் மடகாஸ்கர் வீரர்களும் தமிழகத்தின் ஜல்லிக்கட்டு போலவே காளைகளை அடக்குகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும் என்றார்.
ஜல்லிக்கட்டு தடைக்குப் பின்னால் வெளிநாட்டு நிறுவனங்களின் சதித்திட்டம் இருக்கிறது என்று நாட்டின மாடுகளின் இனவிருத்தி உட்பட பல அறிவியல் பூர்வமான தகவல்களை கூறிவருபவரும், ஜல்லிக்கட்டுக்கு தீவிரமாக ஆதரவு திரட்டி வருபவருமான கார்த்திகேய சேனாபதி, உலகளவில் தமிழர்களின் ஆளுமையை எடுத்துக்காட்டுவதாகத்தான் மடகாஸ்கர் தகவல்கள் உள்ளன என்று கருத்து தெரிவித்தார்.

ஆப்ரிக்கா கண்டத்திலிருந்துதான் இந்தியா உட்பட ஏனைய கண்டங்கள் பிரிந்தன என்ற கோணத்தில் பார்த்தால், இந்த காளைகள், வீர விளையாட்டுகள் ஆப்பிரிக்காவிலிருந்து வந்ததாகக் கூட இருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் ஜல்லிக்கட்டு மற்றும் காளைகளின் வரலாறு இன்னும் நீண்ட நெடியதாக இருக்கும் என்றார்.
ஜல்லிக்கட்டும் குழந்தைத் திருமணமும்
கார்த்திகேய சேனாபதி மேலும் ஒரு தகவலையும் நினைவு கூர்ந்தார். ஜல்லிக்கட்டு மீதான வழக்கின் போது, குறுக்கிட்ட நீதிபதி, 'குழந்தைத் திருமணம் நம் நாட்டில் நடைபெற்று வந்தது. அது ஏற்புடையதல்ல என்று நாம் சட்டதிருத்தம் கொண்டு வரவில்லையா... அதைப்போல் தற்போதைய நிலவரப்படி ஜல்லிக்கட்டு தடைசெய்யக்கூடியதுதான்,' என்று கருத்து தெரிவித்தார்
தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குழந்தைத் திருமணத்தை தடுக்க, வயது வரம்பை உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டு வந்தோம். ஆனால் திருமணத்தை தடை செய்யவில்லை. அதைப்போலவே , தேவைப்பட்டால் ஜல்லிக்கட்டில் சில நடைமுறைகளை அமல்படுத்த சட்டத் திருத்தம் கொண்டுவரலாம். தடை செய்வது என்பது உங்கள் உவமானப்படி சொல்வதென்றால் 'திருமணத்தை தடை செய்வதற்கு ஒப்பானது' என்று மறுப்பு தெரிவித்தார்.

நீதிபதியின் கருத்தை வெளியிட்ட ஊடகங்கள், அரசு வழக்ககறிஞரின் மறுப்புக் கருத்தை இருட்டடிப்பு செய்து விட்டன," என்று கார்த்திகேய சேனாபதி தனது வருத்தத்தை தெரிவித்தார்.
மடகாஸ்கரில் தமிழர்கள் வாழ்ந்து வந்ததாகவோ, குடியேறியதாகவோ தெரியவில்லை. ஜல்லிக்கட்டு தமிழகத்திலிருந்து மடகாஸ்கர் சென்றதா? அல்லது கண்டங்கள் பிரிவதற்கு முன்னால், ஆதிகாலம் தொட்டே நடைபெற்று வருகிறதா? என்ற கேள்விக்கு விடை தெரியாவிட்டாலும், வெவ்வேறு வடிவங்களில் வீர விளையாட்டாக உலகத்தின் பல பகுதிகளில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அந்தந்த நாடுகளில் A2 ரக பால் தரும், நம் நாட்டின மாடுகள் பாதுகாக்கப்பட்டு வருவதும் முக்கியமானதாகும்.
-இர தினகர்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications