லாட்டரி: கடந்த ஆண்டு ரூ.61.36 கோடி வென்ற தாத்தாவுக்கு இந்த ஆண்டு ரூ.18.42 கோடி பரிசு
புளோரிடா: அமெரிக்காவில் லாட்டரி டிக்கெட்டில் கடந்த ஆண்டு பரிசு வென்ற நபருக்கு இந்த ஆண்டும் பரிசு விழுந்துள்ளது.
அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் போஸ்மேன்(67). அவர் புளோரிடாவில் உள்ள கடை ஒன்றில் கடந்த ஆண்டு லாட்டரி டிக்கெட் வாங்கினார். அந்த டிக்கெட்டுக்கு அவருக்கு ரூ.61.36 கோடி பரிசு விழுந்தது. இதையடுத்து அவர் மீண்டும் பரிசை எதிர்பார்த்து லாட்டரி டிக்கெட் வாங்கினார்.
இந்நிலையில் இந்த ஆண்டு அவர் வாங்கிய டிக்கெட்டுக்கு ரூ. 18.42 கோடி பரிசு விழுந்துள்ளது. ஒரு முறையாவது பரிசு விழுந்திருந்தா என்று நினைத்த பலர் ஆண்டுக் கணக்கில் லாட்டரி டிக்கெட் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த தாத்தாவுக்கு ஆண்டுதோறும் பரிசு விழுகிறது.
தற்போது விழுந்துள்ள பரிசை ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் வீதத்தில் அடுத்த 30 ஆண்டுகளுக்கு தவணை முறையில் தருமாறு தெரிவித்துள்ளார் ஜேம்ஸ். இந்நிலையில் மூன்றாவது முறையும் பரிசு வெல்வோம் என்று நம்புகிறார் அவர்.












Click it and Unblock the Notifications