மாஸ் காட்டிய விஜய்! மலேசியாவில்.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா செய்த மலையளவு சாதனை!
கோலாலம்பூர்: விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சுமார் 1 லட்சம் ரசிகர்கள் பங்கேற்றிருக்கிறார். அந்த வகையில் இந்த நிகழ்ச்சி, மலேசியாவில் அதிகமானோர் பங்கேற்ற நிகழ்வு என, 'malaysian book of record'ல் இடம் பெற்றிருக்கிறது.
விஜய் சினிமாவை கடந்து தற்போது அரசியலுக்குள் நுழைந்திருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கியுள்ள அவர், எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் களமிறங்க இருக்கிறார்.

அந்த வகையில் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் இதுதான் கடைசி திரைப்படம் என்று சொல்லப்படுகிறது. எனவே இந்த திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. விஜய் தனது அரசியல் மேடைகளில் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். திரைப்படத்திலும் அதே மாதிரியான கருத்துக்கள் இடம்பெறுமா? என்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
இந்த பின்னணியில்தான் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் அரசியல் பேசக்கூடாது என்றும், தவெக கொடி, பேனர்கள், துண்டுகள் உள்ளே அனுமதி கிடையாது என்றும் காவல்துறை தெரிவித்திருக்கிறது. இதையும் மீறி, இளைஞர் ஒருவர் தவெக கொடியை நிகழ்ச்சி அரங்குக்குள் கொண்டு சென்றிருக்கிறார். அவர் தற்போது மலேசியா காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த விழாவில் ஏராளமான திரை பிரபலங்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பங்கேற்றிருக்கின்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய இயக்குநர் அட்லி, "சிலர் இலைகளை போல சில காலம் மட்டும் இருந்து, காற்றடித்தால் பறந்து விடுவார்கள். சிலர் கிளைகளை போல இருப்பார்கள். ஆனால், முறிந்துவிடுவார்கள். ஆனால், உங்கள் பின்னால் வேர்களை போன்ற வலுவான கூட்டம் இருக்கிறது. அது நிலைத்து நிற்கும். அதற்கு காரணமும் நீங்கள்தான் அண்ணா" என்று குட்டி ஸ்டோரி சொல்லியிருக்கிறார்.
அதேபோல என் கெரியரில் பெஸ்ட் படம் மாஸ்டர் மற்றும் லியோதான். என் லியோவிடம் எதையாவது கேட்க சொன்னால்.. லியோ 2 படத்திற்கான தேதியை கேட்பேன். அவர் பிளடி ஸ்வீட் என்பார். என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார்.
இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள், TVK.. TVK என முழக்கமிட்டனர். இதை கேட்ட விஜய், இங்கு வேண்டாம் என்பதை போல் சைகையில் பதிலளித்திருந்தார். இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.
-
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது












Click it and Unblock the Notifications