உலகிலேயே முதல்முறை.. இன்டர்நெட் ஸ்பீடில் ஜப்பான் படைத்த ரெக்கார்ட்.. இவ்வளவு வேகமா? நம்ப முடியலையே!
டோக்கியோ: உலகிலேயே மிக அதிக இன்டர்நெட் வேகத்தை அடைந்து ஜப்பான் புதிய சாதனை படைத்துள்ளது. உலக நாடுகள் மலைத்து போகும் அளவிற்கு மிக அதிக வேகத்தை அந்த நாடு அடைந்துள்ளது.
ஒரு காலத்தில் ஒரு எம்பி டேட்டாவை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு டிரான்ஸ்பர் செய்யவே சில நிமிடங்கள் ஆகும் என்ற நிலை இருந்தது. அதன்பின் 2ம் ஜெனரேஷன், 3ம் ஜெனரேஷன் நுட்பங்கள் வர தொடங்கியதை அடுத்து இணையத்தில் டேட்டா டிரான்ஸ்பர் வேகம் எடுத்தது.
தற்போது உலகம் முழுக்க பல நாடுகளில் இணையத்தில் 5ஜி நுட்பம் டிரான்ஸ்பர் செய்ய பயன்பட்டு வருகிறது. இந்தியா போன்ற நாடுகளில் இன்னும் இணையம் முழுமையான 5ஜி வேகத்தை அடையவில்லை.

வேகம்
இந்த நிலையில்தான் ஜப்பானில் உலகிலேயே மிக அதிக இன்டர்நெட் வேகம் எட்டப்பட்டுள்ளது. இதற்கு முன் ஜப்பான் மற்றும் யுகேவில் 178 டிபி வேகம் எட்டப்பட்டது. 1 டிபி என்பது 1,000 ஜிபி ஆகும். 178000 ஜிபி தகவலை ஒரு நொடியில் பரிமாறும் வேகம் கடந்த 2019ல் ஜப்பானிலும், யுகேவிலும் எட்டப்பட்டது.

இப்போது முறியடிப்பு
இதே சாதனை தற்போது ஜப்பானால் முறியடிக்கப்பட்டுள்ளது. 319 டிபி வேகத்தை எட்டி ஜப்பான் விஞ்ஞானிகள் புதிய சாதனை படைத்துள்ளனர். அதாவது ஒரு நொடியில் 319000 ஜிபி தகவலை பரிமாற்றம் செய்து புதிய சாதனை படைத்துள்ளது. ஜப்பானின் தேசிய தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் ( Japan's National Institute of Information and Communications Technology - NICT) செய்த ஆராய்ச்சியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

சாதனை
இந்த சோதனையில் பைபர் ஆப்டிக் கேபிள் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக பைபர் ஆப்டிக் கேபிள் தொழில்நுட்பத்தில் மையத்தில் ஒரே ஒரு பைபர் ஆப்டிக் core வயர் மட்டுமே இருக்கும். அதை சுற்றி கேபிள் பாதுகாப்பு இருக்கும். ஆனால் இந்த ஆராய்ச்சியில் 4 பைபர் ஆப்டிக் கேபிள் core பயன்படுத்தி உள்ளனர்.

வேகம்
இதனால் நினைத்ததை விட வேகமாக டேட்டாக்களை ஜப்பானில் நடந்த இந்த சோதனையில் பரிமாற்றம் செய்துள்ளனர். அதோடு சோதனை முயற்சியாக 3001 தூரத்திற்கு கேபிள் நீளத்தை செயற்கையாக அதிகரித்து சோதனை செய்துள்ளனர். இதில் சின்ன தடங்கல் கூட ஏற்படாமல் 319 டிபி வேகத்தில் டேட்டா டிரான்ஸ்பர் ஆகியுள்ளது.

ஆம்ப்ளிபயர்
இந்த கேபிளில் வேகத்தை அதிகரிப்பதற்காக ஆம்ப்ளிபயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக பூமியில் கிடைக்கும் மிகவும் அரிதான மினரல்கள் சிலபயன்படுத்தப்பட்டு , அதன்மூலம் புதிய வகை ஆம்ப்ளிபயர் உருவாக்கி உள்ளனர். இதன் காரணமாகவே இணையத்தின் வேகம் 319 டிபி வேகம் வரை எட்டியதாக ஜப்பானின் தேசிய தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால்
உலகிலேயே இதுதான் இணையத்தில் பயன்படுத்தப்பட்ட மிக அதிக வேகம் ஆகும். உலக நாடுகள் இடையே இது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இது மக்கள் பயன்பாட்டிற்கு வர வாய்ப்பில்லை. அரசு நிறுவன பயன்பாட்டிற்கு எதிர்காலத்தில் இது பயன்படும். நீண்ட தொலைவிற்கு டேட்டாவை வேகமாக அனுப்ப இது உதவும். பெரிய நிறுவனங்கள், அரசு ஆராய்ச்சிகளில் டேட்டாக்களை நீண்ட தூரம் டிரான்ஸ்பர் செய்ய இது உதவும்.

மக்கள் பயன்பாடு
சாதாரண மக்கள் பயன்பாட்டிற்கு இந்த வேகம் கிடைக்க வாய்ப்பு குறைவு. ஆனால் இந்த தொழில்நுட்பம் 6ஜி தொழில்நுட்பத்தின் வேகத்தை உயர்த்த உதவும். முழுமையாக இந்த தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு வர இன்னும் சில மாதங்கள் ஆகும் என ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications