ஜப்பானில் ஒரு சூரை மீன் ரூ.11 கோடிக்கு விற்பனை.. ப்ளூஃபின் டூனா மீனில் என்ன ஸ்பெஷல்? வாவ் அதிர்ஷ்டம்
டோக்கியோ: ஒரே ஒரு மீன் 11 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா.. அப்படியென்ன அந்த மீனில் உள்ள ஸ்பெஷாலிட்டி? இப்படியொரு ஆச்சரியமான சம்பவம் எங்கே நடந்திருக்கிறது தெரியுமா?
மீன்களிலேயே முள் அவ்வளவாக இல்லாதது சூரை மீன்கள்தான்.. மிகவும் மிருதுவான சூரை மீனில் கொலஸ்ட்ரால், வைட்டமின் A, D, புரோட்டீன், உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமுள்ள மீன்களில் இந்த சூரை மீன்களும் ஒன்று.

புரதச்சத்து அதிகமாகவும், கொழுப்புச்சத்து குறைவாகவும் உள்ளதால்தான், மீன் பிரியர்களால் இந்த மீன்கள் அதிகமாக விரும்பப்படுகிறது.. வளரும் பிள்ளைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க செய்வதுடன், கர்ப்பகாலத்தில் ஏற்படக்கூடிய மன அழுத்தத்திலிருந்தும் பெண்களை விடுபட உதவுகிறது.
அதிகமான சத்துக்கள்: குறைந்த ரத்த அழுத்தம் பாதிப்பு உள்ளவர்களுக்கும், உடல் எடையை சீராக நிர்வகிப்பவர்களுக்கும், ஏற்ற மீனாகும். மினுமினு பளபள சருமம் வேண்டும் என்று நினைப்போர், இந்த மீனை சாப்பிட்டு வந்தாலே போதுமாம்.
இருதய தமனிகளில் உள்ள கொழுப்பை குறைப்பதில் இந்த மீன்களுக்கு முக்கிய பங்கு உள்ளன. புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்கள், மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள், நரம்பு பிரச்சனை உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள், கண்பார்வை பாதிக்கப்பட்டவர்கள், இப்படி அனைவருமே சாப்பிடக்கூடிய மீனாக , சூரை மீன்கள் உள்ளதால்தான், ஏற்றுமதியிலும் டாப்பில் திகழ்ந்து வருகிறது.
பற்றாக்குறை: அதுமட்டுமல்ல, உலகின் அதிக சுவை மற்றும் அதிக விலை உள்ள மீன்களில் சூரை மீனுக்கு முக்கிய இடம் உண்டு.. ஆங்கிலத்தில் இந்த வகை மீன்களை டியூனா என்பார்கள். ஜப்பானில் இந்த மீன் படுபேமஸ்.. பசிபிக் கடலில் அதிகம் கிடைக்கும் இந்த மீன் ருசிக்கு ஜப்பானியர்கள் அடிமை. அதிலும் ப்ளூஃபின் டியூனா என்றால் கூடுதல் ருசி இருக்குமாம்.
இந்நிலையில், புத்தாண்டை ஒட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலுள்ள பிரபல மீன் சந்தையில், ப்ளூஃபின் டியூனா எனப்படும் சூரை மீன் ஏலமிடப்பட்டுள்ளது. Toyosu எனப்படும் இந்த மீன் மார்கெட்தான், உலகிலேயே மிகப் பெரிய மீன் சந்தையாகும். இங்கு நடக்கும் மீன் ஏலம் என்றால் உலக நாடுகளும் உற்று கவனிக்குமாம்.
பிரபல உணவகம்: அந்தவகையில், இந்த வருடம் ஏலத்தில், 276 கிலோ எடை கொண்ட இந்த மீன், 207 மில்லியன் யென் கொடுத்து , ஜப்பானின் பிரபல உணவகம் ஒன்று, இந்த மீனை விலைக்கு வாங்கியிருக்கிறது. 207 மில்லியன் யென் என்றால், நம்ம ஊர் மதிப்பில் ரூ.11 கோடியே 14 லட்சம் ரூபாயாகும்.
இந்நிறுவனம்தான் கடந்த 5 வருடங்களாகவே ஏலத்தில் அதிக விலை கொடுக்கும் நிறுவனமாக இருந்து வருகிறது. இதற்கு முன்பு இதே மார்க்கெட்டில், கடந்த 2019ல் ஒரே நாளில் 26 கோடிக்கு நீல சூரைமீனை வாங்கி இந்த நிறுவனம் சாதனை படைத்திருந்தது. இப்போது ஒரே மீன் அதிக விலைக்கு வாங்கி புதிய சாதனையை படைத்திருக்கிறது.
ராசியான ஏலம்: டியூனா மீன்கள் அதிகமாக வேட்டையாடப்பட்டு, பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறதாம். அதனால்தான் ஜப்பானில் அதிக விலைக்கு இந்த மீன்கள் விற்கப்படுவதாக சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல, வருடத்தின் முதல் ஏலத்தில் டூனா மீனை வாங்குவது, மிகவும் ராசியாக பார்க்கப்படுகிறதாம்.!!!












Click it and Unblock the Notifications