ஜப்பான்காரரின் மூளை.. வாடகை கார் கேள்விப்பட்டிருப்பீங்க.. வாடகை நண்பர் தெரியுமா.. லட்சத்தில் சம்பளம்
டோக்கியோ: தனிமையில் வாடும் நபர்களுக்கு வாடகை நண்பராக செல்லும் 41 வயதான நபர் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் சம்பாதித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
என்ன தான் டெக்னாலஜி, வளர்ச்சி, அதிக சம்பளம் என்று பேசினாலும் இப்போதெல்லாம் பெரும்பாலானோர் தனிமையில் இருப்பதாகவே உணர்கிறார்கள். நீண்ட நேர வேலை, இரவுப் பணி, இஎம்ஐக்கள், குடும்பப் பிரச்னை என பல்வேறு பிரச்னைகளால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை தற்போது தனிமைப் பிரச்னையை அனுபவிக்கின்றனர்.

இந்நிலையில், தனிமையில் இருக்கும் நபர்களுக்கு ஆதரவாக ஜப்பானில் இருக்கும் இளைடர் ஒருவர் நண்பராக வாடகைக்குச் சென்று வருகிறார். வாடகை கார், பைக்குகளை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், 41 வயதாந நபரான இவர் ஒரு வாடகை நண்பராக செயல்பட்டு வருகிறார். இதன் மூலமாக இந்த இளைஞர் ஆண்டுக்கு ரூ. 69 லட்சம் சம்பாதித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தனிமையில் இருப்பதாக உணரும் நபர்கள் இவரிடம் வாடகைக்கு அணுகி தங்களது தனிமையைப் போக்கிக் கொள்கின்றனராம். ஆனால், பாலியல் நடவடிக்கைகளுக்காகவோ, காதல் துணைக்காகவோ இவர் ஒருபோதும் செல்வதில்லையாம். வாங்க இவரைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம்.
ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் ஷோஜி மோரிமோட்டோ. 41 வயதான இவர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், அவரது நிறுவனத்தில் இருந்து 2018 ஆம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதன் பிறகு ஷோதி எந்த வேலைக்கும் செல்லாமல் தனியாக இருந்து வந்துள்ளார்.
அப்போதுதான், தனிமையில் இருப்பவர்களுக்கு துணையாகச் செல்லலாம் என்ற எண்ணம் இவருக்கு தோன்றியுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 80 ஆயிரம் டாலர்களை ஷோதி சம்பாதித்து வருகிறார். அதாவது இந்திய மதிப்பில் 69 லட்சம் ரூபாயை ஆண்டுக்கு சம்பாதித்து வருகிறாராம்.
தனிமையில் இருப்பவர்களுடன் பேசுவதற்காகவும், நல்ல நண்பரை விரும்புபவர்களுக்கு வாடகை நண்பராக செல்லும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். இதன் மூலமாக ஷோதி மோரிமோட்டோ ஜப்பானில் மிகவும் பிரபலமடைந்துள்ளார்.
வீட்டில் சுத்தம் செய்யும் வேலைகளைச் செய்பவர்களுக்கு பேச்சுத் துணைக்காக செல்வது, வீடியோ கால்களின் மூலமாக அவர்களுடன் பேசுவது, இசை நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு துணையாக செல்வது, நண்பராக வெளியில் செல்வது போன்ற பல்வேறு சேவைகளை ஷோஜி செய்து வருகிறார். தனிமையில் இருப்பதாக உணரும் வாடிக்கையாளர்கள் இவரை வாடகைக்கு எடுத்து உடன் அழைத்துச் செல்கின்றனர்.
ஆனால், ஷோஜி பாலியல் நடவடிக்கைகள் தவிர அவர்கள் சொல்லும் அனைத்து விஷயங்களையும் செய்யலாம் என்ற விதிமுறையுடன் இந்த வேலையைச் செய்து வருகிறார்.
இதுகுறித்து ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு ஷோஜி மோரிமோட்டோ பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர் கூறுகையில், வாடகை நண்பராக செல்லும் போது நிறைய சூழ்நிலைகளை கடந்துள்ளேன். வெயில், குளிர் போன்றவற்றில் வரிசையில் பல மணி நேரம் நிற்பது உள்ளிட்ட பல கடினமான சூழ்நிலைகளை நான் சந்தித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
வாடகை நண்பர் வேண்டும் என்று ஆண்டுக்கு 1,000க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் ஷோஜிக்கு வருகின்றன. இரண்டு முதல் மூன்று மணி நேரம் செலவிடுவதற்கு அதிகபட்சமாக ஷோதி 17 ஆயிரம் ரூபாய் வரை கோரிக்கையாகப் பெற்று வருகிறாராம்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications