ரோட்லயே சோறு போட்டு.. குழம்பு ஊற்றி சாப்பிடலாம் போலயே.. பளீச் தூய்மையில் ஜப்பான்.. வைரல் வீடியோ
டோக்கியோ: நம் நாட்டைச் சேர்ந்த சமூகவலைதள பிரபலம் ஒருவர் சமீபத்தில் ஜப்பான் நாட்டுக்கு சென்றுள்ளார். ஜப்பான் மிகவும் தூய்மையாக இருக்கும் என்று கூறுவார்கள். அதை உறுதிப்படுத்துவதற்காக அவர் ஜப்பான் சாலைகளில் வெள்ளை நிற சாக்ஸ் அணிந்து நடந்தார். அதன் முடிவுகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீட்டில் இருந்து வெளியில் சென்றாலே டிப் டாப்பாக வலம் வர நினைப்பார்கள். அதிலும் வெளியூர், வெளி மாநிலம், வெளி நாடுகளுக்கு சென்றால் கேட்கவா வேண்டும். அதற்காகவே தனி பர்சேஸ்களை செய்து மிடுக்காக செல்வது வழக்கம்.

அப்படி வெளிநாடு சென்ற பெண், காலில் வெறும் சாக்ஸ் மட்டும் அணிந்தபடி ஊர் முழுவதும் நடந்தார் என்றால் நம்ப முடிகிறது. இந்திய பெண் ஒருவர் ஜப்பான் சென்றபோது, காலில் ஒரு வெள்ளை நிற சாக்ஸ் அணிந்து நடந்து சென்றுள்ளார். அவர் காலில் சாக்ஸ் மட்டும் அணிந்து சென்றது அதிசயமல்ல. அதன் பிறகு நடந்தது தான் ஹைலைட்.
சிம்ரன் பலார் ஜெயின் என்ற சமூகவலைதள பிரபலம் சமீபத்தில் ஜப்பான் நாட்டுக்கு சென்றுள்ளார். ஒவ்வொரு நாடும் சுகாதாரம், தூய்மை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். நம் நாட்டில் தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள். இருப்பினும் பல மெட்ரோ சிட்டிகளில் சுகாதாரம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

வித்தியாசமான கலாசாரத்தைக் கொண்ட ஜப்பான் நாடு சுகாதாரத்துக்கு மிகவும் பெருமை பெற்றது. சிம்ரன் பலார் சமீபத்தில் ஜப்பான் நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர் பல வீதிகளில் பயணம் செய்து அதை தன் சமூகவலை தள பக்கத்தில் விலாக் வீடியோவாக வெளியிட்டார்.
அதில் அவர் பதிவு செய்த ஒரு வீடியோ பயங்கர வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சிம்ரன், கடைக்கு சென்று ஒரு புதிய வெள்ளை நிற சாக்ஸ் வாங்குகிறார். சாலையோரம் வந்து தான் அணிந்திருந்த காலணியை அகற்றிவிட்டு, அந்த வெள்ளை நிற சாக்ஸை அணிகிறார்.
பிறகு அவர் நடக்க தொடங்கினார். சிக்னலில் சாலையை கடப்பது, பிளாட் பார்மில் ஹாயாக வாக்கிங் போவது என்று தொடர்ந்தது. கடைசியில் தான் ஆச்சர்யம் காத்திருந்தது. சிம்ரன் தொடங்கிய இடத்திலேயே அமர்ந்து அந்த சாக்ஸ்களை காட்டினார். அவ்வளவு தூரம் நடந்தும், அதில் ஒரு தூசி கூட ஒட்டவில்லை.
இந்த வீடியோ அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 26 மில்லியன் பார்வைகளை கடந்து வைரலாக பரவி வருகிறது. சுமார் 4 லட்சம் பேர் அதை லைக் செய்துள்ளனர். பலர் இதை பாராட்டி கமெண்ட் செய்து வருகிறார்கள்.
ஒரு நகரம் எப்படி தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்கு ஜப்பான் தான் முன் உதாரணம். இதுவே நம் ஊராக இருந்தால் வெள்ளை நிற சாக்ஸின் நிறமே மாறியிருக்கும். இதைப் பார்க்கும்போது ஜப்பானுக்கே சென்று செட்டிலாகிவிடலாம் என்று தோன்றுகிறது என நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.
மறுபக்கம், இந்த வீடியோ எடுக்கப்பட்ட விதம் சந்தேகமளிக்கிறது. அதனால் அதை நம்ப மாட்டோம். அங்கு அத்தனை வாகனங்கள் உள்ளன. அப்படியிருக்கும்போது சாக்ஸ் அழுக்காகவில்லை என்பதை எல்லாம் வைத்து மட்டுமே ஜப்பான் தூய்மையாக இருக்கிறது என சொல்ல முடியாது. என்றும் சிலர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications