ஹோட்டலுக்கு நிர்வாணமா வரலாம்... குண்டா இருக்கக் கூடாது..: இது ஜப்பான் ஸ்டைல்
டோக்கியோ: ஜப்பான் நாட்டில் விரைவில் திறக்கப்படவிருக்கும் நிர்வாண உணவகத்திற்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் குண்டாக இருக்கக் கூடாது என்பன உள்ளிட்ட சில விதிமுறைகளை அந்த உணவக நிர்வாகம் விதித்துள்ளது.
லண்டன், ஆஸ்திரேலியாவில் நிர்வாண உணவகங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஜப்பானில் முதல் நிர்வாண உணவகம் வருகிற ஜூலை 29ம் தேதியன்று திறக்கப்படவுள்ளது. இந்த உணவகத்துக்கு "தி அம்ரிதா" என்று பெயரிட்டுள்ளனர். அம்ரிதா என்றால் சமஸ்கிருத வார்த்தைக்கு அமரத்துவம் என்று பொருள்.
இந்த ஹோட்டலில் திடகாத்திரமான ஆண்கள் சிறிய வகை உள்ளாடைகள் அணிந்து உணவு பரிமாற பணி அமர்த்தப்பட்டுள்ளனர். ஆண் மாடல்களின் நடன நிகழ்ச்சியும் இங்கு அரங்கேறுமாம்.

ஆதாம் - ஏவாள்
ஆதி காலத்தில் ஆடைகள் இன்றி இருந்த ஆதாம் - ஏவாளை நினைவுபடுத்தும் வகையில் இது போன்ற ஹோட்டல்களை தற்போது திறந்து வருகின்றனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இதுபோன்ற நிர்வாண ஹோட்டல் திறக்கப்பட உள்ளது.

அடல்ஸ் ஒன்லி
இந்த உணவகத்துக்கு சாப்பிட வருபவர்களுக்கு சில விதிமுறைகளை அந்த உணவு நிர்வாகம் விதித்துள்ளது. அதில், 18 முதல் 61 வயது வரை உள்ள நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

முன்பதிவு அவசியம்
இந்த உணவகத்துக்கு உணவருந்த வருபவர்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும். இங்குள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டே அவர்கள் முன்பதிவு செய்திருக்க வேண்டும். அப்படி முன்பதிவு செய்யப்பட்ட பணம் திருப்பி அளிக்கப்பட மாட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

குண்டூஸ்க்கு அனுமதி கிடையாது
உடலில் டாட்டூ போட்டிருக்க கூடாது. தனது உயரத்துக்கு ஏற்ற சராசரி எடையை கொண்டிருக்க வேண்டும். சராசரி எடையை விட 15 கிலோ கூடுதலாக எடை கொண்டுள்ள நபர்களுக்கு அனுமதி கிடையாது.

பேப்பர் உள்ளாடைகள்
இங்கு வருபவர்கள் உணவகம் வழங்கும் சிறிய பேப்பர் உள்ளாடையை அணிந்து கொள்ளலாம். செல்போன்கள், கேமிரா உள்ளிட்டவற்றை லாக்கரில் வைத்து பூட்டி விட வேண்டும். மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்க கூடாது என்ற விதிமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

கட்டணம் எவ்வளவு
இங்கு உணவருந்த முன்பதிவு கட்டணமாக தலை ஒன்றுக்கு 750 அமெரிக்க டாலர் என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், உணவு விலைகள் மெனு வகைகளை பொறுத்து 130 முதல் 261 அமெரிக்க டாலர்கள் வரையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications