"வெயிட்டா" வேணுமா.. வாங்க இங்கே.. ஜப்பானியர்களின் வேற லெவல் விற்பனை.. என்னாமா யோசிக்கிறாங்கப்பா!

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ: 100 கிலோவுக்கு மேல் எடை கொண்ட உடல் பருமன் கொண்ட மனிதர்களை வாடகைக்கு விடும் சம்பவம் அனைவரையும் ஈர்த்து வருகிறது. அதிலும் எதற்கெல்லாம் இந்த உடல்பருமன் மனிதர்களை வாடகைக்கு எடுப்பார்கள் என்பதற்கான காரணத்தை கேட்டால் அப்பப்பா....

கார், வீடு, கடை, பஸ், லாரி, டூ வீலர், சைக்கிள் இவற்றை எல்லாம் வாடகைக்கு விட்டிருப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் ஜப்பானியர்கள் பல்வேறு பணிகளுக்காக மனிதர்களை வாடகைக்கு அமர்த்துவர்.

இதன் மூலம் அவர்கள் பல்வேறு காரியங்களை சமாளிப்பர். அதாவது காதலர்கள் யாராவது காதலியை ஏமாற்றினால், இந்த ஆட்கள் மூலம் அந்த காதலர்களை நல்வழிப்படுத்தி மனம் மாறச் செய்து சேர்த்து வைப்பர்.

அதிக எடை

அதிக எடை

இப்படியான நிலையில் தற்போது ஜப்பானியர்கள் அதிக எடை கொண்டு உடல் பருமன் மனிதர்களை வாடகைக்கு விடும் பழக்கத்தை கொண்டு வந்துள்ளார்கள். டெபுகாரி (Debucari) எனும் நிறுவனம் இது போன்ற புதிய சேவையை ஜப்பானில் செய்து வருகிறது.

2000 ஜப்பானிய யென்கள்

2000 ஜப்பானிய யென்கள்

100 கிலோவுக்கும் மேல் எடை கொண்ட மனிதர்களை தனி நபர்களோ அல்லது நிறுவனங்களோ வாடகைக்கு இவர்களை அமர்த்திக் கொள்ளலாம். ஒரு நபருக்கு ஒரு மணி நேரத்திற்கு 2000 ஜப்பானிய யென்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ 1,300 ஆகும். இந்த நிறுவனத்தை பிளிஸ் தொடங்கி வைத்தார்.

உணவு

உணவு

இதுகுறித்து பிளிஸ் கூறுகையில் குண்டு மனிதர்களை எதற்காக வாடகைக்கு எடுக்க வேண்டும் என உங்களுக்கு தோன்றலாம். உங்களைவிட பருமனான மனிதரை பார்க்கும் போது நீங்கள் நன்றாக உணவு உண்வீர்கள்.

வசதி

வசதி


எடை அதிகம் கொண்ட நண்பருக்கு ஆடை ஏதேனும் வாங்குவதாக இருந்தால் அதற்கு இந்த உடல் பருமனான மனிதர் மாடலாக இருப்பார். டயட் பிளான் செய்வதற்கும் வசதியாக இருக்கும் என்கிறார் பிளிஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+