சந்திரனில் ‘சோலார் பேனல்’ தகடுகள்... ஜப்பானின் புதிய சூரிய ஒளி மின்சாரத்திட்டம் ‘ஜனா ரிங்’
டோக்கியோ: சந்திரனில் சோலார் பேனல் தச்கடுகளை வைத்து அதன் மூலம் மின்சாரம் தயாரித்து தன் மின் தேவையை தீர்த்துக் கொள்ள ஜப்பான் திட்டமிட்டுள்ளது.
தேவைகளே புதிய கண்டுபிடிப்புகளுக்கு மூலக் காரணம் என்ற அறிஞர்களைன் கருத்தை மெய்ப்பித்து வருகிறது இன்றைய அறிவியல். தனது தேவைகளுக்காக வானம் தாண்டியும் மனிதன் யோசிக்க ஆரம்பித்து விட்டான் என்பதற்கு சமீபத்திய உதாரணங்கள் பலப்பல...
விண்வெளியில் உள்ள மற்ற கோள்கள் மற்ரும் துணைக் கோள்களில் மனிதன் வசிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தான ஆய்வு ஒருபுறம் அரங்கேறிக் கொண்டிருக்க, மறுபுறம் சந்திரனில் விவசாயம் செய்யவும், மின்சாரம் தயாரிக்கவும் நாடுகள் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றன.

புகுஷிமா அணு உலை பாதிப்பு...
கடந்த 2011ம் ஆண்டு, ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தாலும், சுனாமியாலும் அங்கிருந்த புகுஷிமா அணுஉலை வெடித்து சிதறியது. அதன் எதிரொலியாக அங்குள்ள அணுமின் நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன.

மாற்று வழி...
இதனால், அந்நாட்டின் மிந்தேவைக்கு மாற்று வழி உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இயற்கையிலிருந்து, அதாவது சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதை தீவிரப்படுத்த உள்ளனர்.

சூரிய ஒளி மின்சாரம்...
அந்தவகையில், பூமியில் பகலில் மட்டுமே சூரிய ஒளி கிடைக்கிறது. சமயங்களில் மோசமான தட்ப வெப்பநிலை மேக மூட்டம் இருந்தால் அதையும் முழுமையாக பெற முடியாது. எனவே, சந்திரனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளிமூலம் மின்சாரம் தயாரிக்க அந்நாட்டு விஞ்ஞானிகள் முடிவெடுத்துள்ளனர்.

ஜனா ரிங்....
அதன் படி, ஜப்பானின் ‘ஷிமிஷூ கார்ப்பரேசன்' என்ற நிறுவனம் சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியை சுற்றிலும் ‘சோலார் பேனல்' தகடுகளை சீராக அமைத்து அதன் மூலம் சூரிய ஒளி மின்சாரம் தயாரித்து பூமிக்கு கொண்டு வர திட்டமிட்டு, அதற்கு ‘ஜனா ரிங்' என பெயரிட்டுள்ளது.

1 லட்சம் கோடி வாட்....
இத்திட்டத்தின் மூலம், 13 ஆயிரம் டெராவாட் மின்சாரத்தை தயாரித்து பூமிக்கு கொண்டு வர முடியுமாம். அதாகப்பட்டது, ஒரு டெராவாட் என்பது 1 லட்சம் கோடி வாட் ஆகும்.

ரோபோக்கள்....
வரும் 2015ல் தொடங்கப் பட உள்ள இதன் கட்டுமானப் பணிகளில் ரோபோக்கள் பயன் படுத்தப்பட இருக்கின்றன. அவை சந்திரனில், சோலார் பேனல் தகடுகள் மற்றும் சோலார் மின்கலன்களை அமைக்கும்

சோலார் மின்கலன்கள்....
தொடர்ந்து மின்சாரம் தயாரிக்க சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியில் 11 ஆயிரம் கி.மீட்டர் பரப்பரளவில் 400 கி.மீட்டர் இடைவெளியில் ஆங்காங்கே சோலார் மின்கலன்கள் அமைக்கப்பட உள்ளன.

ஆண்டனாக்கள் மூலம்....
இவ்வாறு சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியில் அமைக்கப்படும் சோலார் பேனல் தகடுகள் கேபிள்கள் மூலம் பெறப்படும் மின்சாரம் மைக்ரோவேவ் மற்றும் லேசர் டிரான்ஸ்மிசன் நிலையங்களில் இணைக்கப்பட்டு, பின்னர் அவை 20 கி.மீட்டர் விட்டமுள்ள ஆண்டனாக்கள் மூலம் பூமிக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications