அயன் பட ஜெகன் போல.. கொக்கைன் பொட்டலத்தை விழுங்கிய ஜப்பானியர்.. வயிற்றுக்குள் மருந்து கலந்து.. மரணம்!
டோக்கியோ: அயன் படத்தில் போதை பொட்டலங்களை லபக் லபக்கென்று விழுங்குவார் சிட்டியாக நடித்த ஜெகன்... பிறகு விமானத்தில் பறக்கும்போது வயிற்றுக்குள் போதை பொட்டலங்களில் ஒன்று ஏடாகூடமாக பிரிந்து.. லீக் ஆகி.. கடைசியில் சாகும் நிலைக்குச் சென்றுவிடுவார். அப்படித்தான் ஜப்பான் நாட்டில் ஒரு சம்பவம் நடந்துள்ளது!
ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவருக்கு உழைத்து சாப்பிடுவதில் பெரிசா நம்பிக்கை இல்லை போலும். 42 வயசாகிறது. அதனால் போதை பொருளை கடத்தி சம்பாதிக்கலாம் என முடிவு செய்து அந்த வேலையைதான் பார்த்து வந்துள்ளார்.

இப்படித்தான், அவர் போதை பொருட்களை குட்டி, குட்டி பொட்டலங்களாக சுருட்டி வாயில் போட்டு விழுங்கி விட்டார். பிறகு தென் அமெரிக்காவின் கொலம்பியாவில் இருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு ஃபிளைட்டில் கிளம்பினார்.

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தது. அப்போதுதான் அவருக்கு வயிற்றுக்குள் இருந்த போதை பொட்டலத்தில் ஒன்று பிரிந்து, கொலாப்ஸ் ஆகி உள்ளது. இதனால் திடீரென்று மயக்கமும் ஏற்பட்டது. இதை பார்த்த விமான பணிப்பெண்கள் உடனடியாக கேப்டனுக்கு தகவல் சொல்லி ஃபிளைட்டை அவசரமாக தரை இறக்கினார்கள்.

ஆனாலும் விமானம் தரையிறங்குவதற்குள் அந்த பயணிக்கு நடுவானிலேயே உயிர் பிரிந்துவிட்டது. போலீசார் இது சம்பந்தமான விசாரணை நடத்தினார்கள். பிரேத பரிசோதனையில், அவரது வயிற்றுக்குள் இருந்து 246 போதைமருந்து பொட்டலங்களை எடுத்தனர். அந்த பொட்டலங்களில் ஒன்றுதான் பிரிந்து, ரத்தத்தில் கலந்து உள்ளது.

ஒருசில நிமிடங்களிலேயே போதை அதிகமாகி மூளை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என டாக்டர்கள் சொன்னார்கள். இதுபோலத்தான் உலகம் முழுவதும் போதைக் கடத்தல்காரர்கள் உயிருக்கு உலை வைத்து கடத்தலில் ஈடுபடுகின்றனர்.

-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications