For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இது புது ரகமா இருக்கே! பல லட்சம் செலவழித்து இவர் செய்த காரியத்தை பாருங்க.. வாயை பிளந்த நெட்டிசன்ஸ்

Google Oneindia Tamil News

டோக்கியோ: பல விநோதங்கள் அரங்கேறும் ஜப்பான் நாட்டில் அரங்கேறியுள்ள விநோத நிகழ்வின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் நெட்டில் வைரலாகி உள்ளது.

இந்த நவீன அறிவியல் உலகில் அழகைப் பராமரிக்க அறுவைசிகிச்சை மற்றும் மருத்துவச் சிகிச்சை செய்து கொள்வது ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது. இதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை முதல் பல்வேறு அறுவை சிகிச்சைகள் உள்ளன.

இதுபோன்ற அழகுசாதன அறுவை சிகிச்சை மூலம் மக்களால் தங்கள் விருப்பப்படி உடல் பாகங்களை மாற்றிக் கொள்ள முடிகிறது. இதற்கு பெருந்தொகை செலவாகும் என்றாலும் கூட அதற்கும் சிலர் தயாராகவே உள்ளனர்.

ஜப்பான் இளைஞர்

ஜப்பான் இளைஞர்

அப்படி தான் பல விநோதங்கள் அரங்கேறும் ஜப்பான் நாட்டில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அந்நாட்டில் உள்ள ஒருவர் தான் எப்போதும் விரும்பிய தோற்றத்தை அடைய 12 லட்ச ரூபாய் செலவழித்துள்ளார். இதற்காக அவர் எவ்வித மருத்துவச் சிகிச்சைகளையும் எடுத்துக்கொள்ளவில்லை. தேவையான காஸ்டியூம்களை அணிந்ததன் மூலம் அவர் தனக்குப் பிடித்த தோற்றத்தை அடைந்துள்ளார். பல லட்சம் செலவு செய்து அவர், எந்தவொரு பிரபலத்தைப் போலவும் மாறவில்லை.

நாய்

நாய்

நாயைப் போல மாறத்தான் அந்த நபர் பல லட்சம் செலவு செய்துள்ளார். அதிலும் குறிப்பாகக் கோலி (collie) இன நாய் போலத் தோற்றம் அளிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். அவரது ஆசையை நிறைவேற்ற செப்பெட் என்ற தொழில்முறை நிறுவனம் இந்த ஆடையை வடிவமைத்துள்ளது. இந்த செப்பெட் நிறுவனம் ஜப்பான் நாட்டில் திரைப்படங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கான சிற்பங்களைத் தயாரிப்பதில் பெயர் பெற்ற நிறுவனமாகும்.

 20 லட்சம் யென்

20 லட்சம் யென்

இந்த உடைக்காக அவர் 20 லட்சம் யென் அல்லது தோராயமாக ரூ. 12 லட்சம் செலவழித்ததாகக் கூறப்படுகிறது. இந்த உடையை வடிவமைக்க செப்பெட் நிறுவனத்திற்கு மொத்தம் 40 நாட்கள் ஆகியுள்ளன. "க்யூட்டான விலங்குகளை எனக்கு மிகவும் பிடிக்கும் இதன் காரணமாகவே மிகவும் க்யூட்டான கூலி இன நாயைப் போல மாற நான் முடிவு செய்தேன் என்கிறார்" அந்த இளைஞர் டோகோ! மேலும் தனக்கு 4 கால் விலங்குகள் அனைத்தும் பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஏன் நாய்

ஏன் நாய்

இது தொடர்பாக அவர் கூறுகையில், "அது எனக்கு நெருக்கமாக இருந்து விலங்கு என்பதால் நாயைப் போலத் தோற்றமளிக்க முடிவு செய்தேன். ஒரு நாயின் ஆடையை வடிவமைப்பது ஒப்பீட்டளவில் எளிது. இது மற்ற விலங்குகளை விட மிகவும் யதார்த்தமாக இருக்கும். இந்த கூலி இன நாய்க்கு நீண்ட முடி இருக்கும். இது எனது சில உறுப்புகளை மறைக்க உதவுகிறது. அதனால் தான் கோலி இன நாயைத் தேர்வு செய்தேன்.

ஆடை

ஆடை

இந்த ஆடையை அணிந்து கொண்டு குறிப்பிட்ட முறையில் தான் நடக்க முடியும். இருப்பினும் கூட ஒருவரால் குறிப்பிட்ட விதத்தில் நகர முடியும். ஆடை அணிந்திருக்கும் போது அதிகமாக நகர்ந்தால், பார்க்கும் நபர் எளிதாக நாய் இல்லை என்பதைக் கண்டறிந்துவிடுவார்" என்றும் அவர் தெரிவித்தார்.

English summary
Japan man spents Rs 12 lakh to look like a dog: (12 லட்சம் செலவு செய்து நாய் போல தோற்றத்திற்கு மாறிய ஜப்பான் இளைஞர்) Japan man looks like dog.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X