73 பெண் எம்பிக்களுக்கு 2 டாய்லெட்! கியூவுல நின்னு நின்னு! பிரதமருடன் நாடாமன்றத்தில் போராட்டம்
டோக்கியோ: ஜப்பானில், பிரதமர் சனே டக்காயிச்சி உட்பட சுமார் 60 பெண் எம்.பி.க்கள், நாடாளுமன்றத்தில் அதிக பெண்கள் இருந்தும் இரு டாய்லெட்டை பயன்படுத்த வரிசையில் காத்திருக்கும் நிலை இருப்பதால் கூடுதல் கழிப்பறைகள் கேட்டு போராட்டம் நடத்தினர்.
டயட் சபையின் முக்கிய கூட்ட அரங்கிற்கு அருகே, கீழ்சபையின் 73 பெண் உறுப்பினர்களுக்கு இரு அறைகள் கொண்ட ஒரேயொரு கழிப்பறை மட்டுமே உள்ளது. இது ஆண்களின் ஆதிக்கம், அதிகரித்த பெண் பிரதிநிதித்துவத்திலும் ஏற்றத்தாழ்வை காட்டுகிறது. அக்டோபரில் சனே டக்காயிச்சி முதல் பெண் பிரதமரானார்.

எதிர்க்கட்சியின் யாசுகோ கோமியாமியா, "கூட்டத்தொடர்களுக்கு முன், பெண் உறுப்பினர்கள் கழிப்பறைக்காக நீண்ட வரிசையில் நிற்க நேரிடுகிறது" என்றார். இம்மாதத் தொடக்கத்தில், 58 பெண் உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனுவை, கீழ்சபை விதிகள் மற்றும் நிர்வாகக் குழுத் தலைவர் யாசுகசு ஹமாடாவிடம் அளித்தார்.
யோமியூரி ஷிம்புன் படி, கீழ்சபையில் ஆண்களுக்கு 67 அறைகளுடன் 12 கழிப்பறைகளும், பெண்களுக்கு 22 அறைகளுடன் ஒன்பது வசதிகளுமே உள்ளன. பெண்கள் வாக்குரிமை பெறுவதற்கு ஒரு தசாப்தத்திற்கு முன்பே, 1936-ல் டயட் கட்டடம் கட்டப்பட்டது.
உலகப் பொருளாதார மன்றத்தின் பாலின இடைவெளி அறிக்கையில், 148 நாடுகளில் ஜப்பான் 118வது இடத்தில் உள்ளது. வணிகம், ஊடகங்களிலும் குறைவான பெண் பிரதிநிதித்துவமே காணப்படுகிறது. தேர்தல்களில், பெண் வேட்பாளர்கள் குழந்தைகளைக் கவனிக்க வீட்டிலிருக்கும்படி கூறும் பாகுபாட்டுப் பேச்சுகளை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழ்சபையின் 465 உறுப்பினர்களில் 72 பேர் பெண்கள் (முந்தைய நாடாளுமன்றத்தில் 45 பேர்). மேல்சபையின் 248 உறுப்பினர்களில் 74 பேர் பெண்கள். சட்டப்பேரவை இருக்கைகளில் குறைந்தது 30% இடங்களை பெண்கள் வகிக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் இலக்காகும்.
மார்கரெட் தாட்சரின் ரசிகையான டக்காயிச்சி, பிரதமராவதற்கு முன்பு "நோர்டிக் நாடுகளின் பாலின சமநிலை"யை விரும்பினார். ஆனால், தனது 19 பேர் கொண்ட அமைச்சரவையில் இரண்டு பெண்களை மட்டுமே நியமித்தார். 64 வயதான டக்காயிச்சி, பெண்களின் உடல்நலப் பிரச்சினைகள், மாதவிடாய் நிறுத்தம் (மெனோபாஸ்) குறித்த தனது அனுபவம் பற்றியும் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
இருப்பினும், டக்காயிச்சி சமூக ரீதியாகப் பழமைவாதி. திருமணமான தம்பதிகள் ஒரே குடும்பப் பெயரைப் பயன்படுத்தும் 19 ஆம் நூற்றாண்டுச் சட்டத்தைத் திருத்துவதை எதிர்க்கிறார். பேரரசர் குடும்பம் ஆண் வழி வாரிசுரிமையைத் தக்கவைக்க வேண்டும் என்றும் விரும்புகிறார்.
கோமியாமியாவின் கூற்றுப்படி, பெண் கழிப்பறைகளுக்கான இக்கோரிக்கை ஜப்பானில் முன்னேற்றத்தின் அடையாளம். ஆனால், பாலின சமத்துவத்தை அடைய நாடு தவறிவிட்டது என்பதையும் இது சுட்டிக் காட்டுகிறது. "பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதற்கான குறியீடு இது", என்றார் அவர். மற்ற துறைகளிலும் சமத்துவம் வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications