துபாயில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஜெயலலிதா பிறந்தநாள்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 66வது பிறந்த நாள் விழா 07.03.2014 அன்று மாலை ஜெ.எஸ்.எஸ். பள்ளி வளாகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவுக்கு அமீரக அதிமுக நிர்வாகி கே.சி. சக்திவேல் தலைமை வகித்தார். ஏ. கார்த்திகேயன் வரவேற்புரை நிகழ்த்தினார். சதீஷ்குமார் மற்றும் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைமை கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் சொல்லின் செல்வர் நாஞ்சில் சம்பத் சிறப்புப் பேருரை நிகழ்த்தினார்.
கவிஞர்கள் காவிரிமைந்தன், யமுனாலிங்கம், அதிரை இளையசாகுல், ஜெயராமன் ஆனந்தி, விஜிபாலு ஆகியோர் வாழ்த்தரங்கில் கவிமழை பொழிந்தனர்.
ஆர். பாலு நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் ஆர். ராஜா, எம். சாகுல் ஹமீத், துர்கா ஆனந்தன், பிரகாஷ், எல்.வெங்கடாசலம், கனி, அரவிந்தன், எஸ். வேல்முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.












Click it and Unblock the Notifications