சொந்தக் கட்சியில் இருந்து டிரம்பை எதிர்க்கும் இரண்டாவது செனட்டர்
அமெரிக்க அதிபர் டொனாடு டிரம்புக்கு அவரது சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியின் செனட்டர் ஜெஃப் ஃப்ளேக் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதோடு, தாம் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
அரிசோனா மாகாண செனட்டரான ஜெஃப் ஃபிலேக், நாட்டின் தலைமையில், "பொறுப்பற்ற, மூர்க்கத்தனமான, கண்ணியமற்ற நடத்தை," என்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்றார்.
இதற்கு முன்பு, அதிபர் டிரம்ப், ஃபிலேக்கை, "நச்சு" எனத் தெரிவித்திருந்தார்.
டிரம்ப் ஏற்கனவே இன்னொரு குடியரசு கட்சி செனட்டரான பாப் கார்க்கரோடு சர்ச்சையில் ஈடுபட்டுள்ளார்.
செனட்டில் தனது முடிவை அறிவிப்பதற்கு முன்பாக, அரிசோனா குடியரசு பத்திரிக்கையிடம் பேசிய அவர், "என்னைப் போன்ற குடியரசு கட்சியாளருக்கு, தற்போதுள்ள குடியரசு சூழலிலோ, கட்சியிலோ இடமிருக்காது," என்றார்.
தனது விலகல் குறித்து அறிவிக்கையில், தான் அதிபரை விமர்சிப்பதை மகிழ்ச்சியாகச் செய்யவில்லை என்று கூறிய அவர், "அது கடமை உணர்ச்சி மற்றும் மனசாட்சி," காரணமாகவே விமர்சிப்பதாக அவர் கூறினார்.
"எனக்கு இருக்கும் குழந்தைகளுக்கும், பேரக்குழந்தைகளுக்கு நான் பதில் கூறியாகவேண்டும். அதிபருக்கும் அதே நிலையே" என்றார் அவர்.
வெள்ளை மாளிகையில் ஊடக செயலாளரான சாரா சாண்டர்ஸ், ஃபிலேக் பதவி விலகியது, நல்ல ஒரு நகர்வு தான் என்றும், ஏனெனில், அவர் மறுதேர்தலில் வெற்றி பெறாமலும் போகலாம் என்றும் கூறியுள்ளார்.
நமது ஜனநாயக நெறிகளுக்கும், லட்சியங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதை இயல்பாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று கூறிய அவர், டிரம்ப்பின் அணுகு முறை மீது கடும் அதிருப்தி உடையவர். அதிபர் தேர்தல் காலத்திலயே டிரம்பை எதிர்த்தவர். ஆனால் கட்சி முடிவை மதித்தே அவர் டிரம்பை ஆதரித்தார்.
பிற செய்திகள்
- மாவோவிற்கு பிறகு சீனாவின் சக்திவாய்ந்த தலைவர், ஷி ஜின்பிங்
- "தேசிய கீதத்துக்கு நிற்பதைவிட ஊழல்வாதிகளுக்கு வாக்களிக்காமல் இருப்பதே தேசபக்தி"
- நடைபாதையில் வல்லுறவு - விசாகப்பட்டினத்தில் ஒரு வெட்கக்கேடான நிகழ்வு
- கிம் ஜாங்-நாம் கொலை: மலேசிய விமான நிலையத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்கள்
-
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்













Click it and Unblock the Notifications