முழுப் பெண்ணாக, கவர்ச்சிப் பெண்ணாக மாறி நிற்கும் கிம்மின் அப்பாவைப் பாருங்கள்!
லாஸ் ஏஞ்சலெஸ்: கிம் கர்தஷியானின் வளர்ப்புத் தந்தை முழுமையான பெண்ணாக மாறியது பழைய செய்தி. ஆனால் ஒரு பெண்ணாக அவர் தனது முழு அவதாரத்தையும் வெளியுலகுக்கு முதல் முறையாக காட்டியுள்ளார். கவர்ச்சியான கோலத்தில் அவரது புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ப்ரூஸ் ஜென்னர்.. முன்னாள் அமெரிக்க தடகள வீரர். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர். பின்னர் டிவி ரியாலிட்டி ஸ்டார் ஆனார். இவரது 2வது மனைவியின் குழந்தைகள்தான் கிம் கர்தஷியான் மற்றும் அவரது சகோதரிகள்.

ப்ரூஸ் இனி பெண்
ப்ரூஸ் ஜென்னர் தற்போது பாலினம் மாறி விட்டார். அதாவது பெண்ணாகி விட்டார். இருந்தாலும் ஆண்கள் உடையிலேயே வலம் வந்த அவர் முதல் முறையாக முழுப் பெண்ணாக தனது தோற்றத்தை வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து அந்தப் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். மேலும் தனது பெயரையும் காத்லீன் ஜென்னர் என்று அவர் மாற்றியுள்ளார்.

வெள்ளை நிற உடையில் தேவதையாக
வெள்ளை நிற ஸ்டிராப்லெஸ் லியோடார்ட் உடையில் ஒரு முழுப் பெண்ணாக அவர் காட்சி தந்துள்ள புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அது வானிட்டி பேர் இதழின் அட்டைப் படத்தில் இடம் பெற்றுள்ளது.
|
இனி நான் காத்லீன்
மேலும் வேனிட்டி பேர் இதழின் இணையதளத்திலும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பேசியுள்ள ஜென்னர், இனிமேல் என்னை காத்லீன் என்று எல்லோரும் அழையுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

என்னிடம் ரகசியம் இல்லை
இதுகுறித்து அவர் கூறுகையில், ப்ரூஸ் எப்போதுமே பொய் சொல்பவன். ஆனால் காத்லீனிடம் ரகசியம் என்று எதுவும் இல்லை. நான் இப்போது சுதந்திரமானவளாக உணர்கிறேன் என்று கூறியுள்ளார் ப்ரூஸ்.. அதாவது காத்லீன்.

ஒபாமா சாதனையை காலி செய்த கிம் அப்பா
மேலும் புதிய டிவிட்டர் கணக்கையும் அவர் தொடங்கியுள்ளார். @Caitlyn_Jenner என்ற பெயரிலான அந்த டிவிட்டர் கணக்குக்கு தற்போது பாலோயர்கள் குவிந்து வருகின்றனர். ஆரம்பித்த 4 மணி நேரத்திற்குள் 10 லட்சம் பாலோயர்கள் குவிந்து விட்டனர். இது புதிய உலக சாதனையாகும். இதற்கு முன்பு அமெரிக்க அதிபர் ஒபாமா ஆரம்பித்த டிவிட்டர் கணக்குக்கு 5 மணி நேரத்தி்ல 10 லட்சம் பேர் வந்ததுதான் சாதனையாக இருந்தது. இதை ஜென்னர் முறியடித்துள்ளார்.
|
வாவ்.. என்ன அழகு!
தனது தந்தையின் புதிய அவதாரம் குறித்தும், அவரது கவர்ச்சி போஸ் குறித்தும் மகள் கம் கர்தஷியான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். எவ்வளவு அழகாக இருக்கிறார் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
— Caitlyn Jenner (@Caitlyn_Jenner) June 1, 2015 |
65 வயதில் பெண் அவதாரம்
65 வயதாகும் ஜென்னர்தான், அமெரிக்காவின் மிகப் பிரபலமான அரவாணி ஆவார். கடந்த ஏப்ரல் மாதம்தான் தான் ஒரு பெண்ணாக மாறியிருப்பதையே அவர் அதிகாரப்பூர்வமாக வெளியுலகுக்கு அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications