"மீடியா மன்னன்" 84 வயது முர்டாச்சிற்கு 4வது திருமணம்... 59 வயது மாடலுடன்!
வாஷிங்டன்: ஊடக உலகின் முடிசூடா மன்னனாக விளங்கும் ராபர்ட் முர்டாச், தனது 84 வயதில் 59 வயது மாடல் அழகியைத் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.
நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சினிமா தயாரிப்பு நிறுவனங்கள், செய்தி இணையதளங்கள் என ஊடகத்துறையின் முடிசூடா மன்னனாக விளங்குபவர் ராபர்ட் முர்டாச்.
ஆஸ்திரேலியாவில் பிறந்தாலும் அமெரிக்க குடியுரிமை பெற்று அமெரிக்கராக வாழும் ராபர்ட்டுக்கு பரம்பரை தொழிலே பத்திரிகைதான்.

விரிவு...
தனது தந்தையின் மறைவுக்கு பின்னர் நியூஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு வந்தார் முர்டாச். அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்த தனது பத்திரிகையை இங்கிலாந்து, அமெரிக்கா என பல்வேறு நாடுகளுக்கு அவர் விரிவு படுத்தினார்.

தொலைபேசி ஒட்டுக் கேட்பு...
அதிரடிச் செய்திகள் மூலம் அவரது பத்திரிகைகள் பிரபலமானது. குறிப்பாக இங்கிலாந்தில் மன்னர் குடும்பத்தினர், பிரபல நடிகர் - நடிகைகள், ராணுவ வீரர்கள் என பிரபலங்களின் தொலைபேசிகளை ஒட்டுகேட்டு வெளியிட்டது இவரது நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிகை.

சொத்து மதிப்பு அதிகரிப்பு...
அது மட்டுமின்றி உலகில் பிரபலமாக விளங்கிய பல்வேறு ஊடகங்களை விலை கொடுத்து வாங்கினார் முர்டாச். இதன் மூலம் அவரது சொத்து மதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

77வது பணக்காரர்...
கடந்தாண்டு போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட கணக்குப்படி, முர்டாக்கின் சொத்து மதிப்பு 74 ஆயிரத்து 810 கோடி ரூபாய் ஆகும். உலகின் 77வது பணக்காரராக முர்டாச் இருக்கிறார்.

முடிசூடா மன்னர்...
தனது 22 வயதில் ஊடகத்துறையில் நுழைந்த முர்டாச், தற்போது ஐந்துக்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 120க்கும் அதிகமான பத்திரிகைகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இதுதவிர பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் அவர் உரிமையாளர் ஆவார்.

சொந்த வாழ்க்கையில்...
ஊடக வாழ்க்கையைப் போலவே அவரது சொந்த வாழ்க்கையிலும் அடுத்தடுத்து மாற்றங்கள். ஏற்கனவே மூன்று முறை நடைபெற்ற திருமணங்கள் முர்டாச்சிற்கு தோல்வியையேத் தந்தன.

முதல் திருமணம்...
கடந்த 1956ம் ஆண்டு முதலில் விமானப் பணிப்பெண் ஒருவரை மணந்தார் முர்டாச். ஆனால், 1967ம் ஆண்டு இருவரும் விவாகரத்து மூலம் பிரிந்தனர். பின்னர் பத்திரிகையாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட முர்டாச், 1999ம் ஆண்டு அவரையும் பிரிந்தார்.

மூன்றாவது திருமணம்...
மூன்றாவதாக சீனாவைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார். அவருடன் 14 ஆண்டுகள் வாழ்ந்து, கடந்த 2013ம் ஆண்டு அவரையும் பிரிந்தார்.

மாடலுடன் காதல்...
அதனைத் தொடர்ந்து தற்போது நான்காவது திருமணத்திற்கு தயாராகியுள்ளார் அவர். தற்போது இவர் 59 வயது மிஸ் ஹால் என்ற மாடலைத் திருமணம் செய்ய இருக்கிறார்.

விரைவில் டும் டும் டும்...
மிஸ் ஹால் நடிகையும் கூட. கடந்த சில மாதங்களாக காதலித்து வரும் இந்த ஜோடி, விரைவில் அதிகாரப்பூர்வமாக தம்பதிகள் ஆக உள்ளனர்.

ஆர்வம்...
புதிய வாழ்க்கையைத் தொடங்கப்போவது தொடர்பாக இருவரும் மிகவும் ஆர்வமாக இருப்பதாக முர்டாச்சின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள்...
இந்த மூன்று திருமணங்கள் மூலம் முர்டாச்சிற்கு 6 குழந்தைகள் உள்ளனர். இதேபோல், தற்போது முர்டாச் திருமணம் செய்ய உள்ள மிஸ் ஹாலுக்கும் ஏற்கனவே 3 மூன்று குழந்தைகள் உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications