அமெரிக்காவின் டர்னர் நீர்வீழ்ச்சியில் மூழ்கிய இந்திய பெண் - பிறந்த நாளே இறந்த நாளான சோகம்
புது மணப்பெண்ணிற்கு எத்தனையோ கனவுகள் அவை நிறைவேறாமலேயே அமெரிக்காவில் டர்னர் நீர்வீழ்ச்சியில் மூழ்கி உயிரிழந்து விட்டார். ஜெஸ்லின் ஜோஸ் என்ற அந்தப்பெண்ணின் உடல் மீட்கப்பட்டு இந்தியாவிற்கு கொண்டு வரப்ப
ஓக்லஹோமா: பிறந்தநாள் கொண்ட டர்னர் நீர்வீழ்ச்சிக்கு நண்பர்களுடன் போன இந்தியப்பெண் ஒருவர் நீர்வீழ்ச்சியில் மூழ்கி உயிரிழந்து விட்டார். இரண்டு நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பின்னர் மீட்கப்பட்ட அந்தப் பெண்ணின் உடல் பிறந்த ஊரான கேரளாவிற்கு கொண்டு வரப்பட உள்ளது.
உயிரிழந்த பெண்ணின் பெயர் ஜெஸ்லின் ஜோஸ் என்பதாகும். கேரளாவைச் சேர்ந்த இவர், அமெரிக்காவின் டல்லாஸ் ஃபோர்த் பகுதியில் வேலை செய்து வருகிறார். 27வது வயதாகும் இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்துள்ளது. கணவரை அமெரிக்காவிற்கு அழைத்துக்கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்.

சில தினங்களுக்கு பிறந்தநாளை கொண்டாட தனது நண்பர்களுடன் டர்னர் நீர்வீழ்ச்சிக்கு சென்றார். தனது பிறந்தநாளே இறந்தநாளாகும் என்று அப்போது அவருக்கு தெரியாது அருவியில் ஆட்டம் போட்ட அனைவரும் ஆழம் தெரியாமல் நீரோட்டத்தில் சிக்கினர். கூச்சலிட்டதில் அங்கிருந்தவர்கள் சிலரை மீட்டனர். ஆனால் ஜெஸ்லின் ஜோஸ் மட்டும் சிக்கவில்லை நீரோட்டத்தின் சுழலில் சிக்கி காணாமல் போய்விட்டார்.
காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்புப்பணியினர் வந்து உடலை தேடினர். பொதுமக்கள் அருவியில் குளிக்க தடை செய்யப்பட்டது. தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்னர் ஜெஸ்லின் ஜோஸ் உடல் உயிரற்ற சடலமாக சிக்கியுள்ளது.
திருமணமாகி புதுமணக்கனவுகளுடன் அமெரிக்கா சென்ற ஜெஸ்லின் சில தினங்களில் சடலமாக கேரளாவிற்கு திரும்பப் போகிறார். ஜெஸ்லினின் மரணம் அவரது உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜெஸ்லினின் சடலத்தை எதிர்பார்த்து கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications