I Love You, Mom! உயிரை பிடித்துக்கொண்டிருந்த அந்த நொடி! துப்பாக்கிச்சூட்டுக்கு நடுவே பாசப்போராட்டம்!
சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் யூத நிகழ்ச்சி ஒன்று நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குள் புகுந்த மர்ம நபர், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இந்த தாக்குதலுக்கு நடுவே சிக்கிய இளைஞர் ஒருவர், தனது தாய்க்கு போன் செய்து, எனது குரலை கேட்பது இதுவே இறுதியாக கூட இருக்கலாம் என்று கூறி அழுதிருக்கிறார். தற்போது இந்த உரையாடல் சோசியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.
போண்டி கடற்கரையில், ஹனுக்கா எனும் யூத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. ஹனுக்கா என்பது யூதர்களின் புனித விழாவாகும். உலகம் முழுவதும் நேற்று தொடங்கி 8 நாட்கள் வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும். எனவே இந்த விழாவை கொண்டாட கடற்கரையில் நேற்று யூதர்கள் மகிழ்ச்சியாக ஒன்று கூடியிருந்தனர்.

துப்பாக்கிச்சூடு
அந்த சமயத்தில் திடீரென பட்டாசு வெடிப்பதை போல சத்தம் கேட்டிருக்கிறது. விழாவை வேடிக்கை பார்க்க கூடியிருந்த மக்களுக்கு இது புரியவில்லை. விழாவை கொண்டாட பட்டாசுதான் வெடிக்கப்படுகிறது என்று நினைத்துக்கொண்டனர். ஆனால், கொஞ்ச நேரத்திலேயே சம்பவ இடத்திற்கு போலீஸ் ஹெலிகாப்டர்கள் வந்துவிட்டன. அதன் பின்னர்தான் கூட்டத்திற்குள் அசம்பாவிதம் நடந்திருப்பது புரிந்திருக்கிறது.
இருப்பினும் மக்கள் உஷாராவதற்குள் பல ரவுண்டுகள் சுடப்பட்டிருக்கின்றன. மொத்தம் 15 பேர் கொல்லப்பட்டனர். பலரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கின்றனர்.
பாசப்போராட்டம்
இந்த சம்பவத்தின்போது உயிரை கையில் பிடித்துக்கொண்டு பலரும் ஓடி ஒளிய முயன்றனர். கடற்கரையில் ஒளிவதற்கு போதிய இடம் இல்லை என்பதால், மணல் பரப்பில் படுத்திருக்கிறார்கள். அப்படித்தான் இளைஞர் ஒருவர் தப்பியிருக்கிறார். அவர் சம்பவத்தின்போது தனது அம்மாவுக்கு போன் செய்திருக்கிறார். "நான் இங்கே ஒரு மோசமான சூழலில் மாட்டிக்கொண்டிருக்கிறேன். அநேகமாக இதுதான் நான் உங்களிடம் பேசும் கடைசி நொடியாக கூட இருக்கலாம். I Love You, Mom" என்று கூறியுள்ளார். இந்த உரையாடல் தற்போது சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
ஆஸ்திரேலியாவில் ஷாக்
ஆஸ்திரேலியாவில் கடந்த 30 ஆண்டுகளில் பதிவான மோசமான துப்பாக்கிச்சூடு சம்பவம் இது. அமெரிக்காவில் நடப்பதை போல ஆஸ்திரேலியாவில் இப்படி துப்பாக்கிச்சூடு சம்பவம் அடிக்கடி நடக்காது. காரணம் இந்நாட்டில் துப்பாக்கிகளுக்கு என கடுமையான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. ஆஸ்திரேலியாவில் ஒருவர் துப்பாக்கியை வாங்க வேண்டும் எனில், அதற்கு உண்மையான காரணத்தை தெரிவிக்க வேண்டும். உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்றெல்லாம் உருட்டி துப்பாக்கியை வாங்கிவிட முடியாது.
கட்டுப்பாடுகள்
அதை வாங்குபவர் யார்? என்ன வேலை பார்க்கிறார்? உண்மையில் அவருக்கு துப்பாக்கிக்கான தேவை இருக்கிறதா? அவரது மனநிலை, உடல்நிலை எப்படி இருக்கிறது? முறையாக பயிற்சி பெற்றிருக்கிறாரா? என்பதை போலீஸ் சரிபார்க்கும். எல்லாம் சரியாக இருந்தாலும் 24 நாட்கள் வரை காத்திருக்க செய்துதான் துப்பாக்கி வாங்க அனுமதி கொடுப்பார்கள்.
கெடுபிடி அதிகம்
அத்துடன் இந்த கெடுபிடிகள் முடிவடைந்துவிடாது. துப்பாக்கியை வாங்கிய நபர் அதை எப்படி பராமரிக்கிறார்? எங்கு வைத்திருக்கிறார்? குறிப்பாக பூட்டிய பெட்டிக்குள் வைத்திருக்க வேண்டும், அப்படித்தான் வைத்திருக்கிறாரா? அல்லது நம்மூர் நாட்டாமை மாதிரி செவுத்துல ஆணி அடித்து தொங்கவிட்டு இருக்கிறாரா? என்பதையெல்லாம் போலீசார் பரிசோதிப்பார்கள். துப்பாக்கி வைத்திருக்கும் இடத்திற்கு பக்கத்தில் தோட்டாக்கள் வைத்திருக்க கூடாது என்றெல்லாம் விதி இருக்கிறது. ஆனால், இவ்வளவும் மீறிதான் இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications